Vallalar Universal Mission Trust   ramnad......
68. அதனுக்கு அதுவாம் விளக்கம்


135. மதனுற்ற வண்ட வரைப்பினெங் கெங்கும்

136. அதனுக் கதுவாம் அருட்பெருஞ்ஜோதி

( உரைவிளக்கம்) முன் அருட்பெருஞ்ஜோதியின் விளக்கம், அவன், அவள், ஆகிய இரண்டு நிலைகளாய் நம் உயிர், உடல் இயல் வண்ணங்களாய்க் குறிக்கப்பட்டன. அடுத்து, இங்கு அவ் இறை அருள் ஒளியே இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு பொருள் வடிவாயும் ஆகி விளங்குவதாகக் கூறப்படுகின்றது.

உலகப்பொருள்கள், பலவும், திட, திரவ, வாயு, மின்காந்த ஆற்றல் இயல் இயல் உடையனவாய்க் காணப்படுகின்றன. இவற்றில் இவ்வண்டமாகிய நிலப்பரப்பில் எங்கெங்கும் காணப்படுவன மண்ணியற் பொருட்களும், நீரியற்பொருட்களுமேயாம். இதனால், கண்ணாற் காண்கின்ற முக்கியப் பொருள்களையே ஈண்டு எடுத்துரைக்கப்படுவாதய்க் கொள்ளலாம். மதன் உற்ற அண்டம் என்றால், கடினத்தன்மை, வலிமை, வனப்பு இயல்பு கொண்ட இப் பூமி கோளம் எனலாம், மதன் என்ற சொல் வலிமை அழகு என்ற பொருள் கொண்டதாம். திண்ணிய உலக மேற் பரப்பில் எத்தனை எத்தனை கைபுனைந்தியாற்றாக் கவின் பெரும்பொருள் கள் காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு பொருளையும் ஆழ்ந்து ஆய்ந்து நோக்கினால் அறியப்படுவது என்ன? அழகும் ஆற்றலும் கொண்ட புறநிலைத் தோற்றத்திற்கு உள்ளீடாய் இருப்பது, அணுத்திரள்களின் அற்புத இணைப்பு அமைப்பேயாம். அந்த அற்புத்தத் தோற்ற அமைப்பச் சிதைத்து விட்டால், கவின் தோற்றம் கலைந்து , அணுஅணுவாய்ச் சிதைந்து விளங்கக்கூடும். அகண்டவெளி நிறை ஒவ்வொரு அணுவிலும் இருப்பது, அணு சக்தி, மின்காந்த ஆற்றல் முதலியனவாக இன்றைய உலகம் அறிவியல் ஆய்வால் கண்டுள்ளது. இந்த ஆற்றல்களுக்கெல்லாம் அடிநிலையாய், தாயகமாய் , முதற்பொருளாய் இருப்பது நம் அருட்பெருஞ்ஜோதியே என்பது நமது மெய்ஞ்ஞானமாகிய அருளறிவியல் கண்டுள்ளதாகும்.

ஒன்றான அருட்பெருஞ்ஜோதியேதான் தன்பொருட்சக்தி வெளியீட்டால் ஐம்பூத அணுக்களாய்த் தோன்றி, அணுத்திரள் பொருட்களாய் உருவாகி விளங்குகின்றதாம். முதற்ஜோதி அணுநிலையிலிருந்து ஐம்பூத அணுக்கள் வெளிப்பட்டிலங்குகின்றன. பிரபஞ்சப் பொருட்கள் யாவும் ஐம்பூத அணுக்களின் சேர்க்கையால் ஆகியுள்ளன. எனவே, பொருளுலகம், அணு நிலையில் இலயமாகியும் இருந்ததாக அறியப்படுவதாம். இக் கருத்துண்மை விளக்கவந்த சொற்களே, மகாலிங்கம், ஐம்பூதலிங்கம் என்பனவாம். இலயம் + கம் + = இலிங்கம். லிங்கம் எனப் படுவது . இலயம் என்றால் ஒடுக்கநிலையாம். அகண்ட வெளி ந்றை இறைஜோதி அணுநிலையே மகாலிங்கம்.. அதில் ஒடுங்கி யிருந்து வெளிப்பட்டு இலங்குவன பஞ்சபூத லிங்கம். இவற்றால் உருவாய ஒவ்வொரு பொருளும், அகமிருந்து விளங்கும் அருட்பெருஞ்ஜோதியின் விரிநிலையாகவே உள்ளதாம். இதுவே, அது அதுவாக விளங்கும் அருட்பெருஞ்ஜோதியாயப் போற்றப்படுகின்றது.

அகவல் உரைவிளக்கம்

தயாநிதிசரவணானந்தா

vallalarspace.com/vumt