Vallalar Universal Mission Trust   ramnad......
புலை கொலை தவிர்த்தவர்கள் மட்டும் உள்ளே புகலாம்


வடலூர் ஞானசபையில் உருவவழிபாட்டை நீக்கி ஜோதி வழிபாடு கோர்ட் உத்தரவின் பேரில் சமீபத்தில் அமுல் செய்யப்பட்டது. அதேபோல் வடலூரில் உள்ள இறைச்சிக்கடைகள் , மதுபானக்கடைகள் அனைத்தையும் அப்புறப்படுத்தவேண்டும், மேலும் புலைகொலை தவிர்த்தவர்கள் மட்டும்தான் ஞானசபையின் உள்ளே செல்லலாம் என்று திரு அருட்பிரகாச வள்ளலார் ஞானசபையின் வாயிலின் முன்னே எழுதிவைத்துள்ளார் இதை இன்றுவரை எத்தனைபேர் கடைப்பிடிக்கின்றார்கள் என்பது தெரியாது. அதை முதலில் உறுதியாக அனைவரும் பின்பற்றவேண்டும். வடலூரில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நமது தீவிர சன்மார்க்கிகள் விருப்பப்படுவது போல் புலைகொலை தவிர்த்தவர்கள் தான் ஞானசபையின் உள்ளே செல்லலாம் என்ற கொள்கையினையும் உறுதியாக செயல்படுத்தவேண்டும். ஏனென்றால் நமக்கு தெரிந்தே அசைவ உணவு உண்பவர்கள் பலபேர் ஞானசபையின் உள் சென்று தரிசனம் செய்கின்றார்கள் ஜோதி வழிபாடு எவ்வளவு முக்கியமோ, ஆக்கிரமிப்புகள் அகற்றுவது எவ்வளவு முக்கியமோ அதே போல் அசைவ உணவு உண்பவர்கள் யாரும் ஞானசபையின் உள்ளே செல்லக்கூடாது என்பது கட்டாயமாக்கப்படவேண்டும். .வே.ரா பெரியார் ஒருமுறை வடலூர் சென்றிருந்தபோது நான் புலால் உண்பவன் அதனால் ஞானசபையின் உள்ளே வரமாட்டேன் என்றாராம்.

அதேபோல் நேற்று வரை அசைவ உணவு உண்பவர்கள் எல்லாம் இன்று நான் சைவமாக மாறிவிட்டேன் ஜீவகாருண்யத்தைக் கடைப்பிடிக்கின்றேன் ஆறாம் திருமுறை நான் படிக்கின்றேன் நீங்கள் படிக்கின்றீர்களா என்று கேட்டுக்கொண்டு சன்மார்க்கி என்று ஏமாற்றுகின்றவர்களே இன்று அதிகமாக இருக்கின்றார்கள்.

தயா……