
இராமநாதபுரம் நகரில் பங்குனி உத்திர விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றது. அன்றைய தினம் காலையில் திருமதி ஹரிலெட்சுமிராஜவீர் அவர்கள் மற்றும் தயவு தமிழரசி சிவக்குமார் ,
முன்னிலையில் அகவல் பாராயணம் நடைபெற்றது. அன்னதானத்திற்கு இடமளித்த அன்பர் திரு குணாளன் அவர்கள் ஜோதி ஏற்றினார்கள். அன்றைய தினம் வள்ளலார் அறநிலையம் சார்பாக அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் வெகு விமரிசையாக இந்த ஆண்டும் அன்னதானம் காலை 11 மணியிலிருந்து மாலை நான்கு மணி வரை வழங்கப்பட்டது. இராமநாதபுரம் வண்டிக்காரத்தெருவில் உள்ள அருணாச்சலா உணவக உரிமையாளர் அன்னதானத்திற்கு இடம் வழங்கி உதவினார்கள். அவர்களுக்கு மிக்க நன்றி. அன்னதானம் சுமார் 1500 பேருக்கு வழங்கப்பட்டது. நான்கு காய்கறிகளுடன் அப்பளம், சாம்பார், மோர் , ரசம் வழங்கப்பட்டது. முதியோர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பள்ளிக்கூட மாணவிகள் என அன்னதானத்தில் அனைவரும் கலந்து கொண்டனர்.
மேலும் அன்னதானத்தன்று உணவு பரிமாற வழக்கம்போல் இராமநாதபுரம் ஆஞ்சநேய பக்தர்கள் குழு தலைவர் திரு சந்தானம், திரு சங்கர் திரு ரவிச்சந்திரன் எலெக்ட்ரீசியன் மேலும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பொறியாளர்களா பணிபுரியும், திரு வீரகார்த்தி, ஆனந்த், மேலும் அவரது நண்பர்கள் என மொத்தம் ஆறு பேர் வந்திருந்தனர்.செல்வன் சூரஜ்மேலும் முத்து தட்டெழுத்துப் பயிற்சிப்பள்ளி உரிமையாளர் திரு நவநீதகிருஷ்ணன் அவர்களும் அன்னதானத்தில் கலந்துகொண்டார். மேற்படி அன்னதானம் வழங்கும் இடம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் கூட்டம் அதிகமாக இருந்தது. அடுத்த ஆண்டு மேலும் அதிகளவில் அன்னதானம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரவு உணவும் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அன்றைய தினம் நகரில் அனைத்து உணவு விடுதிகளும் அடைக்கபட்டுவிடுவதால். அன்றைய தினம் இரவு உணவும் வழங்கினால் நன்றாக இருக்கும் என்பது பொதுமக்களின் கருத்து.
அன்னதானத்திற்கு இடமளித்து உதவிய திரு குணாளன் , மற்றும் அவரது புதல்வர்கள் திருபாபு மற்றும் சகோதரர்கள் ஆகியோருக்கு வள்ளலார் அறநிலையம் சார்பாக நன்றியினைத்தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் அவர்கள் எல்லா வளங்களும் பெற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப் பிரார்த்திக்கின்றோம்.
dhaya
vallalarspace.com/vumt
Write a comment