Vallalar Universal Mission Trust   ramnad......
வள்ளலார் அறநிலையமும் இணைந்து நடத்திய இலவசகண்சிகிச்சை முகாம் வள்ளலார் அறநிலையம் சேஷாத்திரி மெமோரியல் ஹாலில் நடைபெற்றது. 67 பேர் கலந்து கொண்டனர்.

இலவச கண்சிகிச்சை முகாம்

16/03/2010 அன்று இராமநாதபுரம் பார்வையிழப்பு தடுப்புச் சங்கமும்,

வள்ளலார் அறநிலையமும் இணைந்து நடத்திய இலவசகண்சிகிச்சை முகாம் வள்ளலார் அறநிலையம் சேஷாத்திரி மெமோரியல் ஹாலில் நடைபெற்றது. 67 பேர் கலந்து கொண்டனர். அதில் 11 பேர் இலவச கண் புரை அறுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை அனுப்பிவைக்கப்பட்டனர். கலந்து கொண்டவர் அனைவருக்கும் அன்றையதினம் மதிய உணவு வழங்கப்பட்டது. அறுவைசிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் 11 பேருக்கும் இரவு உணவும் வள்ளலார் அற நிலையத்திலிருந்து அரசு மருத்துவமனைக்கே சென்று வழங்கினோம்.

அன்றைய தினம் அரசு செவிலியர் பயிற்சிப்பள்ளியில் இருந்து 25 பயிற்சி செவிலியர்களும் வந்து கலந்து கொண்டு உதவினார்கள். அனைவருக்கும் மதிய உணவு வள்ளலார் இல்லத்திலேயே வழங்கப்பட்டது. அடுத்த இலவச கண் சிகிச்சை முகாம் 27/04/2010 அன்று நடைபெற உள்ளது. என்பதினை தெரிவித்துக்கொள்கின்றோம். முகாமில் நமது இல்லத்தில் உள்ள மாணவ மாணவியர் மற்றும் முதியோர் அனைவருக்கும் கண் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ உதவிகள் செய்யப்பட்டது.

தயா……