திரு சத்தியமூர்த்தி அண்ணன் நிதி நிறுவன அதிபர், வ உ சி நகர், இராமநாதபுரம், தயவு ஜோதிமுருகன் அய்யாவின் நண்பர், ஒவ்வொரு ஆண்டும் நமது வள்ளலார் இல்லத்திற்கு தேவையான உதவிகள் பல்வேறுவகையிலும் பல வருடங்களாக செய்து வந்தவர். அவ்வப்போது வந்து வள்ளலார் இல்லத்திற்கு என்ன தேவை என்பதினை கேட்டறிந்து உடனுக்குடன்பூர்த்தி செய்து வந்தவர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் ஒரு தேதியில் ஒருவேளை உணவு அளித்து, அவர் குடும்பத்தினருடன் வந்திருந்து வள்ளலார் அறநிலையத்தில் உள்ள அனைவருக்கு உணவு பரிமாறி, குடும்பத்தினருடன் உணவருந்தி, செல்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
. மேலும் கடந்த வருடம் இரண்டு பெரிய எமர்ஜென்சி லைட்டுக்கள், ஒரு சைக்கிள், பெரிய வாட்டர் டிரம்கள், ஆகிய வழங்கினார். மேலும் இந்த வருடம் என்ன தேவை என்று சொல்லுங்கள் என்று 19//03/2010 அன்று சொல்லிச்சென்றவர் 21./03/2010 அன்று இறைவனடி சேர்ந்தார் என்றால் எங்களால் நம்பமுடியவில்லை. மேலும் , அண்ணன் சத்தியமூர்த்தி அவர்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வள்ளலார் இல்ல ஆதரவற்ற மாணவ/மாணவியர், மற்றும் ஆதரவற்ற முதியவர்கள் சார்பாக பிரார்த்திக்கின்றோம்.மேலும் எங்களது ஆழ்ந்த வருத்தத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தயா