Vallalar Universal Mission Trust   ramnad......
48. அம்பலமே எம்பலம் - அகவல் உரைவிளக்கம்

95. எம்பல மெனத் தொழு தேத்தினோர்க் கருள்புரி

96. அம்பலத்தாடல் செய் அருட்பெருஞ்ஜோதி

( உரைவிளக்கம்) அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உண்மை அளப்பரிய அகண்ட வெளி முற்றும் நிரம்பியே இருக்கின்றது. இந்த இறையுண்மை அனுபவப்படும்போது, ஆன்ம சிற்றணுவில் பேரின்ப உணர்வுமயமாயும், அவ்வான்மாவைச் சூழ உள்ள வெளி நிறை ஒளிமயப் பிரபஞ்சத் தோற்றமாயும் விளங்குவதாம். இந்த ஆன்ம சிற்றணுநிலையே சிற்சபை எனவும், சிற்றம்பலம் எனவும், சிற்பொதுவெனவும் குறிக்கப்படுகின்றது மேல் சூழ உள்ள பெரு வெளிநிலையே பொன் வண்ண நிறையொளி காரணத்தால் , பொன்னம்பலம் என்றும், பேரம்பலம் என்றும், பொற்சபை அல்லது பொற்பொது வென்றும் புகலப்படுவதாம்.

சிற்றம்பலத்தேதான் கடவுளரின் நிறையருள் ஆற்றல் நிலைத்திருந்து கொண்டு அருளாணை புரிகின்றது. அவ்வாணையின்படியே புறத்தே ஐந்தொழில் செயல்பட்டுக்கொண்டேயிருகின்றது. நிலைத்த அக அருள் நிலையை ஊன்றி திருவடியாகவும், புறத்தே செயல்படுகின்ற தோற்றம் ஆடும் திருவடியாகவும், அணிந்து கூறப்படும். பொன்னம்பலத்திலே ஆடலடிக்காட்சியும், சிற்றம்பலத்தே அருளின்பானுபவமும் பெறப்படும் உண்மையை.

` கள்ளுண்டேன் எனப்புகன்றார் கனகசபை நடுவே

கண்டதுண்டு, சிற்சபையில் உண்டது முண்டு”

என அனுபவமாலையிற் குறிப்பிடுகின்றார். ஆகவே, நமது அக சிற்சபையிலிருந்துதான் மெய்யின்பானுபவம் பெற வேண்டு மென்பது தெளிவாம். இது குறித்தே இதுகாறும் இச் சிற்சபை அல்லது சிற்றம்பலத்தைப் பற்றியே எடுத்துரைத்து வந்தவர் இங்குதான் அம்பலத்தே ஆடல் செய் புறத்திருவடியைச் சுட்டுகின்றார். இயல்பாகவே சிற்சபையின்கண் ஆண்டவரின் பேரருள் ஆற்றல் மறைந்து கிடக்கின்றது. ஆனால், அவ்வாற்றல் வெளியாகி அனுபவத்தில் ஏற்கப்படத்தான் இந்தப் புறப் பிரபஞ்சச் செயற்பாடு நிகழ்ந்து கொண்டுள்ளதாம். இவ்வைந்தொழில் ஆடற்செயலால் இன்று மனித வடிவம் உண்டாகி, இதில் விளைந்துள்ள அருள் ஞானத்திற்கு, அக உண்மை அனுபவப்பட இருக்கின்றதாம்.

அருட்பெரும்பதியின் பேரின்பானுபவம் பெறவேண்டியே அம்பலவாயிலாகிய புருவ நடுவிடத்திருந்து அக நோக்கித் திருமுன் நின்று விண்ணப்பிக்கின்றார்கள் சுத்த சன்மார்க்கச் சத்திய ஞானிகள். அகமுடைய அருட்பெரும்பதியே நமக்கு முழு ஆதரவாயும், உயிர்த்துணைப் பேராற்றலாயும், நித்தியானந்த வாழ்வு வழங்குபவராயும் இருக்கின்றார் என்பது உண்மை, இதனால்தான் மெய்ஞ்ஞானிகள் இந்தப் பதியை எம்பலம் எனப் போற்றித் தொழுது நிறை அருள் பெற்று உய்வு பெறுகின்றார்கள். இக் கருத்துதான் இங்கு

எம்பலமெனத் தொழு தேற்றினோர்க் கருள்புரி

அம்பலத் தாடல்செய் அருட்பெருஞ்ஜோதி”

என்று ஓதப் பெற்றுள்ளதாம்.

தயாநிதி சரவணானந்தா

அகவல் உரைவிளக்கம்

vallalarspace.com/vumt