
93. பாணிப் பிலதாய்ப் பரவினோர்க் கருள்புரி
94. ஆணிப் பொன் அம்பலத் தருட்பெருஞ்ஜோதி
( உரைவிளக்கம்) நமது அருட்பெருஞ்ஜோதிக் கடவுட்காட்சி, வெளிப்பட்டு பொன்னம்பலமாக அணிந்து கூறப்படுகின்றாது. இந்த ஆணிப்பொன்னம்பலத்தின் உண்மை விளக்கம், சுத்த சன்மார்க்கத்தில் நன்கு விளங்குவதாம். அகம் ஒளிர் சுத்த சன்மார்க்கச் சத்திய ஞானசபையில் அருள் விசாரத்தால் ஒன்றி நிற்கும்போது, கடவுள் ஒளி, சிற்றொளி விளக்கென விளங்கி , விரிசுடர், எனத் திகழ்ந்து , நிறைஜோதியாய், நிரம்பிப் பிரகாசிக்கின்றதாம். இம்மூவொளி வண்ணமும்பொன்மயமானதே எனினும் நடுவுள்ள சுடர்ப்பொன் நிலையில்தான், அதற்கு அப்பாலும் இப்பாலும் உள்ள பொன்னொளியின் இயல்பறியக் கூடியிருக்கின்றது. ஆகவே இந்தச் சுடர்ப் பொன்னை முதலாக, அளவுகோலாக “ யுனிட் “ ஆக வைத்துக்கொண்டு மற்ற பொன்னின் மாற்றைக் குறிக்க நேருகின்றதாம். இந்த அனுபவத்திற்குரிய முதற் பொன்னையே ஆணிப்பொன் என்று கூறுவர். இந்த ஆணிப்பொன்னுக்கு மாற்று 1008 ஆம். இவ்வாயிரத்தெட்டு என்பதும் ஞான சிதாகாசம் அல்லது ஸஹஸ்ர ஆகாச தத்துவத்தை யுணர்த்த வந்ததாம். ஸஹஸ்ரம் என்றாம் ஆயிரம் . அகரமாகிய ஆகாசம் எட்டு, ஆதலின் இந்த நிலை 1008 ஆம்.
மேற்படி 1008 மாற்றுடைய ஆணிப்பொன்னம்பலத்தில் இருந்து கீழ்நிலையிலுள்ள உலகறி பொன்னையும் , மேல்நிலையிலுள்ள தத்துவாதீதப் பெருஞ்ஜோதிப் பொன்னையும் அளந்து பார்க்கின்றான் மனிதன், இவன் 96 தத்துவம் கொண்டவன். இது கொண்டுதான் விசாரத்தாற் கண்டுள்ளான் ஆணிப் பொன்னம்பலத்தை, அந்த ஆணிப் பொன்னுக்கு மாற்று 1008 ஆக உள்ளதால், அதனை இந்த 96ல் பிரித்து , வகுத்துப் பார்க்கும் போது 1008 /96= 10 ½ ( பத்தரையாம்) இதுதான் உலகறி பொன்னில் இயல் மாற்று கண்ட வககயாம். இந்தப் பத்தரை என்ற குறிப்புக்கும் அனுபவப் பொருள் உண்டு. அதாவது உண்மை பத்தரை அல்லது பக்தரைக் தன் வண்ணமாக மாற்றக்கூடியது என்பதாம், பொன்மேருவைச் சேர்ந்த காகமும் பொன்னாகும் என்பது சித்தர் பரிபாஷையில் விளங்குவது. இந்த ஆணிப்பொன்னம்பலத்தில் இருந்துகொண்டுதான் நம் வள்ளற்பெருந்தகை காட்சி அனுபவத்தைக் கண்ணிகளாகத் தொகுத்துள்ளார் அதுதான்
“ ஆணி பொன்னம்பலத்தே கண்ட காட்சிகள்
அற்புதக் காட்சியடி – அம்மா
அற்புதக் காட்சியடி”
என்றதாக விரிந்து விளங்கு வது ஆம் – இதன் முழு விளக்கமும் “ காட்சிக்கண்ணி” என்ற உரை நூலில் கண்டு கொள்ளலாம்.
ஆயிரத்தெட்டு மாற்றுடைய ஆணிப்பொன் அம்பலத்தில் இருந்து, அகண்ட வெளி நிறை இறை ஜோதியின் இயல்பறிந்து கொள்ள முற்படும்போது , அது அளப்பரியதாய் மேலும் மேலும் பெருகிக்கொண்டே யிருக்கின்றதாம். நிறை இறைவண்ணம் இதுவெனக் காண்பது மிக அரியதாய் உள்ளதாம். ஆகவே அந்தப் பெருஞ்ஜோதிப் பொன்னுக்கு உரிய மாற்று அளந்து கூறிவிடமுடிகின்றதில்லையாம். இதனால், இறைவனை , மாற்றறியாத செழும் பசும் பொன்னே என்கின்றார் அருள் அடிகளார், அன்றியும் , “ மாற்றை அளந்து அறிந்திலம் “ என்று அருமறை ஆகமங்கள் வழுத்த மணிமன்றோங்கும்” அருட்பொன்னாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே நம் அருட்பெருஞ்ஜோதி அம்பலம், ஆணிப்பொன்னம்பலமாக இருக்கின்றதாய் அறிந்து அடைகின்றோம். உண்மையாக இந்த அம்பலத்தை அடைந்துவிட்டால் ( மனோபாவானையினாலோ, அறிவியற் பரிசோதனையினாலொ அல்ல, அருள் அனுபவத்தால்) நிறை இன்ப வாழ்வு உண்டாவது திண்ணமாம். இவ் அம்பலம் உற்று நின்றால்., வேண்டுவன எல்லா தடையுறாமலும் உடனுக்குடனும் கிடைக்கபெறும் என்பது குறிக்கவே இன்க்கு பாணிப்பில்லாததாய்பொ பரவினோர்க்கு அருள்புரிவதாகச்சுட்டப் பெற்றுள்ளது. ‘ பாணித்தல் என்றால் தாமதித்தல் என்று அருத்தம். பாணிப்பில்லாதது என்றதால், தாமதமில்லாது எண்ணிய எண்ணியாங்கு உடனுக்குடன் வழங்கப்பெறும் என்பது குறிப்பாம். ஆகவே, இவ் ஆணிப் பொன்னம்பலத்துற்று அருட்பேரின்பத்தை ஏற்போமாக.
தயாநிதி சரவணானந்தா
அகவல் உரை விளக்கம்
vallalarspace.com/vumt
Write a comment