இராமநாதபுரம் நகரின் உள்ளூர் தொலைக்காட்சியான ப்ரியா டிவியின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலை 4 – 5 மணி வரை பூவும் பொட்டும் என்ற நிகழ்ச்சி நடைபெறுகின்றது . (திரு கீதா சங்கர், ஓய்வு பெற்ற அதிகாரி சுங்க இலாகா, இராமநாதபுரம் அவர்களால் இந்த நேர்காணல் நடத்தப்படுகின்றது) அந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு முக்கியமான நபர்கள் நேரடி பேட்டி ஒளிபரப்பாகின்றது.
அந்நிகழ்ச்சியில் இன்று மாலை வள்ளலார் அறநிலையம் சார்பாக ஒரு நேரடி பேட்டி ஒளிபரப்பானது. அதில் வள்ளலார் அறநிலையம் இராமநாதபுரத்தில் எப்பொழுது துவங்கப்பட்டது. யாரால் துவங்கப்பட்டது, தயவு ஜோதிமுருகன் அய்யாவிற்குப்பிறகு எவ்வாறு நடத்தப்படுகின்றது. இதில் பொதுமக்களின் பங்கு என்ன, பொதுமக்களின் கருத்து என்ன. இன்றைய . போதுமான நிதி வசதி உள்ளதா. வெளிநாட்டில் இருந்து பண உதவி வருகின்றதா. மேலும் முதியோர்களை எப்படி பராமரிக்கின்றீர்கள். மாணவ மாணவியர்களை எப்படி பராமரிக்கின்றீர்கள்..வயதானவர் ஒருவர் இறந்துவிட்டால் என்ன செய்வீர்கள். போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. உதாரணமாக நமக்கு ஒருமாதத்திற்கு தேவையான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
. மின்கட்டணம், டெலிபோன் பில், கட்டிட வாடகை, மாணவ மாணவியர் மருத்துவச் செலவினங்கள், கட்டிடப் பராமரிப்பு, எரிபொருள் தேவை, (இன்றைய தேதியில் ஒரு தூக்கு விறகின் விலை ரூ100) மாதம் 5தூக்கு விறகு வாங்கப்படுகின்றது. ஒருகிலோ துவரம்பருப்பின் விலை80 ரூபாய். மேலும் நமக்கு பதினைந்து நாட்களுக்கு ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் தேவைப்படுகின்றது. மாதத்திற்கு இரண்டு எரிவாயு சிலிண்டர் தேவைப்படுகின்றது. இது போக ஒவ்வொரு இல்லத்திற்கும் நித்தியகால ஜோதிபராமரிப்பிற்கே தேங்காய் எண்ணெய் குறைந்தது 40 லிட்ட ர்தேங்காய் எண்ணெய் தேவைப்படுகின்றது.
மேலும் அன்றாட தண்ணீர் தேவையூனிபார்ம், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். பலசரக்கு தேவை, காய்கறிகள்.மாணவ/மாணவியர்க்கு தேவையான நோட்புக், பேனா பென்சில்,
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
மேலும், இந்த ஒரு நிகழ்ச்சியானது நமது வள்ளலார் அறநிலையத்தைப்பற்றி இராமநாதபுரம்மாவட்ட பொதுமக்கள் அனைவரும் விரிவாக அறிந்துகொள்ள ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. .
இவ்விசயங்கள் யாவும் செயல்படுவது என்பது மிகச்சாதாரண விஷயம் அன்று, வள்ளல் பெருமானின் முழு ஆசியுடனும்,இராமநாதபுரம் மாவட்ட மக்களின் முழு ஒத்துழைப்போடும்தான் நடைபெறுகின்றது. தயவுத்திரு ஜோதிமுருகன் அய்யாவின் ஆசியுடனும்.
எங்கே கருணை இயற்கையில் உள்ளதோ அங்கே விளங்கும் அருட்பெரும்ஜோதி
அதைச்செய் , இதைச்செய் என்று
எளிதில் சொல்லிவிடலாம் /…..செயல்படுத்தினால்தான் தெரியும் அதில் உள்ள கஷ்டங்கள் / நஷ்டங்கள்.
dhaya......
vallalarspace.com/vumt
2 Comments
ஜோதி முருகன் அய்யா அவர்கள் ராமநாதபுரத்தில் மட்டுமா சன்மார்க்க சங்கம் துவக்கி வள்ளற் பெருமானாரின் கொள்கைகளை பொதுமக்கள் அறியும் வண்ணம் செய்தார் ? உலகெங்கிலும் உள்ள ஜீவர்கள் தெரிந்து கொள்ளும் வண்ணம் வள்ளற் பெருமானாரின் நெறிகளையும், திரு அருட்பாக்களையும், தட்டச்சு செய்து, www.vallalar.org மூலம் ;பரப்பினார். பல சங்கங்கள் துவங்குவதற்கு அவர் ஒரு காரணகர்த்தராக இருந்தார் என்பது, சன்மார்க்க உலகமே அறியும்.அவர் வழித் தோன்றல்கள், அதனை இன்னும் சிறப்பாக செயல் படுத்துவதற்கு சன்மார்க்க உலகம் தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது.பொது மக்களிடம் இருந்து உதவிகள் வரலாம். இருப்பினும், இராமநாதபுரத்தில் நிகழும் ஒவ்வொரு திருவிழாக்களிலும், வள்ளலார் யுனிவெர்சல் மிஷன் ட்ரஸ்ட் நிறுவனம் தனது ஊழியர்கள் மூலம் செய்து வரும் பணி அளப்பரியது.(1) வழிபடு முருகன் கோவில் பங்குனி உத்திரத் திருவிழா...அன்னதானப் பணி (2) கடும் கோடை காலங்களில், வண்டிக்காரத் தெருவில் செல்லும் கிராமத்து மக்கள் பயன் பெறும் வண்ணம் நீர் மோர், மற்றும் குடி நீர் வருடந்தோறும் வினியோகிப்பது (3) திரு உத்திரகோச மங்கையில் வருடந்தோறும் கோவிலின் உள்ளே உழவாரப் பணி மற்றும் ஆருத்திரா தரிசனம் நடைபெறும் காலங்களில், அன்னதானச் சத்திரமே கொள்ளாத அளவிற்கு அன்ன வினியோகம் செய்தல் (4) இந்திய மக்கள் அனைவரும் ராமேஸ்வரம் மேல கோபுர வாசலில் சன்மார்க்க சங்கம் அமைத்து, அருட்பெருஞ் ஜோதி தீபம் ஏற்றி, அங்கு வந்து செல்லும் யாத்திரிகர் அனைவரும், வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி தெரிந்து கொள்வதற்கு, தனது அண்ணன் திரு சோமசுந்தரத்தையே (வயது 78) ஏற்பாடு செய்து தங்கச் செய்தவர்....இப்படி....சொல்லிக் கொண்டே போகலாம்....கடையெழு வள்ளல்களைத்தான் நூல்கள் கூறுவதைக் கேட்டிருக்கின்றோம். உண்மையான (அகத்திருக்கும்) வள்ளலின் நெறியினை இந்தியாவின் தென் கோடியில் (ராமநாதபுரத்தில் இருந்து கொண்டு) ஒரு கலங்கரை விளக்கமாக...விளக்காக அவர் செயல் பட்டார் என்றால் அது மிகையாகாது. மாவட்டக் கலெக்டர் அவர்கள் இந்த நிறுவனத்திற்கே கடந்த தீபாவளி வருகை தர இருந்த அளவிற்கு, இந்த நிறுவனத்தில் செயல்பாடுகள் .. மிக உயர்ந்தவை. தொடரட்டும்..வள்ளற் பெருமானின் பணிகள்.
Monday, February 15, 2010 at 04:29 am
by Ramanujam jam
தயவு ஜோதிமுருகன் அய்யாஅவர்களைப்பற்றி எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்., குறிப்பாக அரசு பணி ஓய்விற்குப்பின் எவ்வளவு ஓய்வூதியம் பெற்றார்கள் என்பதே எங்களுக்குதெரியாது. அதை முழுவதுமே அவர்கள் அறநிலையப்பணிகளுக்கே செலவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.
Tuesday, February 16, 2010 at 03:22 am
by rajaveer jothimurugan
Write a comment