Vallalar Universal Mission Trust   ramnad......
பகுத்தறிவாளர்


தங்கள் அறிவைத் தாங்களே மெச்சிக் கொள்கின்ற இந்தப் பகுத்தறிவாளர்” பற்றியும் வள்ளலார் விமரிசனம் செய்கிறார். அவர்களுடைய பொய் வாதத்தை நம்பவேண்டாவென்று தம் நெஞ்சினைக் கெஞ்சி கேட்டுக்கொள்ள்கிறார்.

எல்லா அறிவும் எமதறிவே என்றுரைக்கும்

பொல்லா வலக்காரர் பொய் உகேல்”

என்னும் பாடலே அதற்குச் சான்று.

பகுத்தறிவாளர் கள் ஒன்று சொல்லிக்கொள்வோர். ஒன்றே குலம்” ஒருவனே தேவென்” என்பதே தங்கள் தெய்வக் கொள்கை என்கின்றனர். இது, திருமூலரிடம் இரவல் பெற்ற கருத்தாகும் , வள்ளலர், திருமூலரின் உண்மைச் சீடர், ஏன் ?: திருமூலர் இயற்றிய திருமந்திரமே அவர் ஓதி வந்த வேதம். அதனால், ஒருவனே தேவன்’ என்னும் கொள்கை அடிகளாருக்கும் உடன்பாடே. பல தெய்வ நம்பிக்கையை மறுக்குமிடத்தின், மறந்தும் ; என்றல் நாவால் உரைக்கமாட்டேன் சிறு தெய்வ நாமங்களே” எனக் கூறுகின்றார். தெய்வம் பலப்பல சொல்லும் பொய் வாதத்தை.

பூவைவிட்டுப் புல்லெடுப்பார் போலுன் திருபாதந்

தேவைவிட்டு வெம்பிறவித் தேவர்களை கோவையிட்டு

கூவுவார் மற்றவரைக் கூடியிடேன் கூடுவனேல்

ஓவுவா ராவ லுனை”

என்னும் பாடலில் மறுத்துரைக்கின்றார். இன்னும்,

வள்ளல் உனை உள்ளபடி வாழ்த்துகின்றோர் தமை

மதித்துடுவ தன்றிமற்றை

வானவரை மதி என்னில் நான் அவரை ஒருகனவின்

மாட்டினும் மறந்தும் மதியேன்

கள்ளம் அறும் உள்ளம் உறும் நின்பதம் லால் வேறு

கடவுளர் பதத் தை அவர் என்

கண் எதிர் அடுத்து ஐய’ நண் என அளிப்பினும்

கடுகவென வெறுத்து நிற்பேன்”

என்னும் பாடலில் , எல்லாம் வல்ல பரம்பொருள் ஒன்றையுன்றிப் பிறிதொரு தெய்வம் பேணாத நெறியைப் பேசுகின்றார்.

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

. பொ. சி.

vallalarspace.com/vumt