Vallalar Universal Mission Trust   ramnad......
இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வள்ளலார் அறநிலையம் மேற்கொண்டு வரும் அறப்பணிகள் விபரம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வள்ளலார் அறநிலையம் மேற்கொண்டு வரும் அறப்பணிகள் விபரம்.

தயவுடையீர் , வந்தனம்

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையாலும், திருவருட்பிரகாச வள்ளல் பெருமானின் திருவடித் தயவாலும்.திண்டுக்கல் சுவாமி சரவணானந்த அவர்களின் பரிபூரணத் திருவருளாலும், தயவுத்திரு ஜோதிமுருகன் அய்யா அவர்களது ஆசியாலும், தயவுள்ளம் கொண்ட அன்பர்கள் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் சன்மார்க்க சங்க நிகழ்ச்சிகள் சுருக்கமாக கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

இராமநாதபுரத்தில் தயவுத்திரு ஜோதிமுருகன் அய்யா அவர்களால் 1985களிலேயே சன்மார்க்க பணிகள் துவங்கப்பட்டுவிட்டன. அதனது தொடர்ச்சியாக பல்வேறு கிளைகளுடன் இன்றும் தயவு ஜோதிமுருகன்(ஓய்வு பெற்ற துணை ஆட்சியர்) அவர்களுக்குப்பின்னும் அவர்கள் விட்டுச்சென்ற பணிகள்யாவும் வள்ளல் பெருமானின் ஆசியுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.

இராமநாதபுரத்தில் வள்ளலார் அற நிலையம் மேற்கொண்டு வரும் பணிகள்.

1. இராமநாதபுரத்தில் ஆதரவற்ற மாணவ / மாணவியர் இல்லம் இன்று சுமார் 22 மாணவ/மாணவியர்களுக்கு தங்குவதற்கு இடம், உணவு, உடை மருத்துவ வசதி, அனைத்தும் வழங்கப்பட்டு வருகின்றது. 1ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ / மாணவியர்கள் உள்ளனர்.

2. இந்த வருடம் வள்ளலார் அறநிலையம், இராமநாதபுரத்தில் உள்ள நமது சேஷாத்திரி இல்லத்தில் சமையலராக பணியாற்றி வரும் செல்வி அக்கா அவர்களது புதல்வி செல்வி ஆதிலெஷ்மி, என்பவரை பொறியியல் கல்லூரியில் சேர்த்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரிக்கு தேவையான கட்டணத்தினை வெளிநாடு வாழ் அன்பர் திரு அய்யாச்சாமி என்பவர் பொறுப்பேற்றுகொண்டு அதனை செலுத்திவிட்டார். மேலும் மேற்படி மாணவிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வள்ளலார் அறநிலையம் இராமநாதபுரமே செய்து வருகின்றது. வருடத்திற்கு சுமார் அறுபதாயிரம்(ரூ60,000) வரை செலவாகும். மீதமுள்ள மூன்றுவருடத்திற்கு வள்ளலார் பொறுப்பில் விட்டுவிட்டோம் அவர் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில்..

3. மேலும் வள்ளலார் அறநிலையத்தின் மூலம் ஆதரவற்ற முதியோர்களையும் பராமரித்து வருகின்றோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

4. பிரதி வாரம் இராமநாதபுரம் நகர் வாரச்சந்தை அன்று (புதன்) கிழமை அன்று சுமார் 150 நபர்களுக்கு மதிய உணவு, பொட்டலங்கள் விநியோகிக்கப்படுகின்றது. மாதத்திற்கு சுமார் 600 உணவுப்பொட்டலங்கள் வருடத்திற்கு சுமார் 7200 பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

5. பிடியரிசித்திட்டத்தின் மூலம் பெறப்படும் அரிசி சுமார் 5 ஆதரவற்ற விதவைகளுக்கு மாதம் சுமார் 20 கிலோ அரிசி இலவசாமாக வழங்கப்படுகின்றது.

6. மேலும் பிடியரிசித்திட்டத்தின் மூலம் பெறப்படும் அரிசியில் மாதம் இரண்டு மூடை அரிசி பரமக்குடியில் தொழுநோயாளிகள் சங்கத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றது இன்றளவும்.

7. மேலும், பிரதி ஆண்டு வள்ளலார் நாட்காட்டி பிரச்சார அடிப்படையில் வெளியிடுதல்.விற்பனைக்கு அல்ல

8. வசதியுள்ள மக்கள் பயன்படுத்தி ஒதுக்கிய ஆடைகளைப் பெற்று ஆதரவற்ற மக்களுக்கு பகிர்ந்தளித்தல்.

9. மேலும் இராமநாதபுரத்தில் ஆருத்திரா தரிசன விழா திரு உத்திரகோசமங்கையில் நடைபெறும் விழாவில் விரிவான அன்னதானம் அளிப்பது. மேலும் ஆருத்திரா தரிசனத்திற்கு முன்பே கோவில் உழவாரப்பணிமேற்கொள்வது. உழவாரப்பணி மூன்றுநாட்கள் நடைபெறும் அன்று உழவாரப்பணியில் கலந்து கொள்ளும் அனைத்து அன்பர்களுக்கும் உணவு அளிப்பது.

10. பிரதி வருடம் பங்குனி உத்திரத்திர விழாவின்போது நகரின் மையப்பகுதியில் விரிவான அன்னதானம் அளிப்பது.

12. ஆதரவற்ற மக்களுக்குரிய திட்டங்களின் மூலம் அரசு உதவி பெறப் பொது மக்களுக்கு உதவி செய்தல். இந்தமாதம் ஐந்து பேருக்கு ஆதரவற்ற விதவை உதவித்தொகை பெற்றுக்கொடுத்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.

14. இலவச கண்சிகிச்சை முகாம்கள் நடத்தி ஏழை எளியமக்களுக்கு கண்ணொளி பெற்றுத்தருவது கடந்த ஆண்டு மட்டும் ஐந்து இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது அதன் மூலம் சுமார் 100 பேருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாம்களில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டது.

15. பிரதி மாதப்பூச விழாவின் போது வடலூர் இல்லத்துக்கு வருவோருக்கு தங்கும் வசதி மற்றும் ஆகார வசதி அளிக்கப்பட்டு வருகின்றது.

16. பிரதி ஆண்டு தைப்பூசத்தின் போது மூன்று நாட்கள் விரிவான அளவில் அன்னதானமும், மேலும் பல்வேறு மாவட்டத்தில் வரும் சன்மார்க்க அன்பர்கள் தங்கு மிடமும் செய்து கொடுக்கப்படுகின்றது. தைப்பூசத்திற்கு இராமநாதபுரத்தில் இருந்து இரண்டு வேன்களில் சுமார் 40 பேர் வடலூர் செல்வது உண்டு.

\ 17., வடலூரில் திருவருட்பா நூல்கள் விற்பனை மற்றும் சுவாமி தயாநிதி சரவணானந்தா அவர்கள் அருளிய விரிவுரை நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியவிஷயம் என்னவென்றால் வள்ளலார் அறநிலையத்தினரால் பராமரிக்கபட்டு வரும் ஒருவரிடமும் நாம் பணம் பெறுவதில்லை.

இதைவிட முக்கியவிஷயம் என்னவென்றால் நமது வள்ளலார் அறநிலையத்தில் மதிய உணவு சுமார் பத்துப்பேருக்கு அனைவரும் மனநிலை பாதிக்கப்பட்டோர், வயோதிகர்கள், போன்றவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் நமது வள்ளலார் அறநிலையத்திற்கு அருகே வசிக்கும் ஊனமுற்றோர் ஒருவருக்கு தினமும் உணவளிக்கப்பட்டு வருகின்றது.

இன்றைய அத்தியாவசியப்பொருட்களின் விலைவாசி ஏற்றத்தில்

துவரம்பருப்பு.. 1 கிலோ சுமார் 90 ரூபாய்

உளுந்து 1 கிலோ சுமார் 85 ரூபாய்

வள்ளலார் அறநிலையம் சேஷாத்திரியில் மட்டும் மதிய உணவு சுமார் 50 பேருக்கு தினமும் தயார் செய்யப்படவேண்டும். ஒருவேளை மதியம் சாம்பார் வைக்கவேண்டுமானால் சுமார் ஒரு கிலோ துவரம்பருப்பு தேவைப்படும்.

இவ்வளவுபணிகளும் தொய்வில்லாமல் நடை பெறுகின்றதென்றால் அது எல்லாம் வள்ள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கருணையாலும், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தயவுள்ளம் கொண்ட தயாநேயர்கள் , கருணையுள்ளம் கொண்ட அன்பர்களின் உதவியால்தான் நடைபெறுகின்றது என்பது உண்மை.

வள்ளலார் அறநிலையத்திற்கு பல்வேறுவகையிலும் உதவிடும் இராமநாதபுரத்தை சேர்ந்த தயா நேயர்கள் அனைவரும் எல்லா வளமும் பெற ,எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை பிரார்த்திக்கின்றோம்.

ஒரு வீட்டில் விசேஷம் காது குத்து, வளைகாப்பு, உணவு மீதமாகிவிட்டது என்றால் உடனே வள்ளலார் அறநிலையம் அந்த உணவு வந்துவிடும் அந்த அளவிற்கு நமது தேவைபோக மீதமுள்ள உணவினை உடனே , அதை உணவுப் பொட்டலமாக்கி ஆதரவற்றோருக்கு ஏழை எளியோருக்கு விநியோக்கின்றோம் என்பதும் குறிப்பிடத்தக்கதி.

அதே போல் நமது மாணவருக்கோ. அல்லது ஒருமுதியவருக்கோ உடல்நிலை சரியில்லை என்றால், உடனே , டாக்டர் ஜெயவீர் அய்யா அவர்கள் நமது வள்ளலார் அறநிலையம் அருகிலேயே இருக்கின்றார்கள். இலவசமாக சிகிச்சையளித்து , மருந்துகளும் அளித்து வருகின்றார்கள்,

இந்தசேவையை டாக்டர் பழனியப்பன் அய்யா அவர்கள், டாக்டர் திருமலைவேலு அவர்கள், டாக்டர் சந்திரசேகரன் அய்யா அவர்கள், அனைவரும் நேரம் காலம் பார்க்காமல் இலவசசிகிச்சை நமது அறநிலையத்தில் உள்ளவர்களுக்கு அளிக்கின்றார்கள்.

இதுபோன்று வள்ளலார் அற நிலையப்பணிகளை சொல்லிக்கொண்டே போகலாம். இது தொடர்ந்து கொண்டே இருக்கும் வள்ளலாரின் ஆசியுடன்.

மேலும் அதிமுக்கியமாகக்குறிப்பிடப்படவேண்டிய விஷயம் உலக அளவில் உள்ள சன்மார்க்க அன்பர்கள் பயன் பெற வேண்டும் என்ற பொதுநோக்கில் இணைய தளத்தினை பராமரிப்பது. எந்தஒரு நாளிதழிலும் வள்ளலாரைப்பற்றி செய்தி வந்தாலும் அதை உடனே இணையதளத்தில் வெளியிடுவது , தினசரி வள்ளலாரைப்பற்றி ஒரு செய்தி வெளியிடுவது, போன்ற பணி இதற்கே மாதம் ரூ 1000 முதல் 1500 வரை செலவாகின்றது.

எனவே, தயவுள்ளம் கொண்ட அன்பர்கள் அவரவர்கள் தரத்திற்கேற்ப ஜீவகாருண்யப் பணிக்கு உதவி, தயாநலம் பெற வேண்டுகின்றோம்.

கடமையைச் செய் பலனை எதிர்பாராதே..

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதே

நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே.

வள்ளலார் அறநிலையம்

இராமநாதபுரம்…….

vallalarspace.com/vumt