மாவட்ட ஆட்சியர் உயர்திரு டி.என். ஹரிஹரன் அவர்களுக்கு வள்ளலார் அறநிலையம்,இராமநாதபுரம்.சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மாவட்ட ஆட்சியர் அவர்கள் வள்ளலார் அறநிலையத்திற்கு இராமநாதபுரம் முகவையூரணி மேற்கு வருகை புரிந்து , வள்ளலார் அறநிலையத்தினரால் ஆதரவு அளிக்கப்பட்டு வந்த ஆதரவற்ற விதவை ஐந்துபேர்களுக்கு ஆதரவற்ற விதவை உதவித்தொகை ஆணையை உடனடியாக வழங்கினார்கள்.
1. பஞ்சவர்ணம்
2.முத்தம்மாள் பாட்டி
3. சீனியம்மாள் பாட்டி
4. சீதையம்மாள் பாட்டி
5. சகுந்தலா... ( இவரது கணவர் இறந்து மூன்றுவருடங்கள் ஆகின்றது. இவருக்கு இரண்டு பெண்குழந்தைகள் இவருக்கு தேவையான கல்வி உதவிகளை வள்ளலார் அறநிலையமே மேற்கொள்கின்றது.)
மேலும் நமது குறைகளை கேட்டறிந்தார்கள். அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க உறுதிகூறியுள்ளார்கள். மேலும் வள்ளலார் அறநிலையத்தினரால் பராமரிக்கப்பட்டு சேதுபதி நடுநிலைப்பளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பிரியாங்க என்பவரது அண்ணன் எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவர் ஒரு சர்க்கரை நோயாளி ஆவார் அவர் தினமும் அவராகவே இன்சுலின் எடுத்துக்கொள்கின்றார், அவரது தந்தைக்கு இரண்டு கண்களும் தெரியாது. மேற்படி மாணவருக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களின் துணைவியார் அவர்கள் தேவையான மருத்துவ உதவிகள் செய்துள்ளார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அவர்களுக்கு வள்ளலார் அறநிலையம் இராமநாதபுரம் சார்பாக பணிவான வணக்கத்தினையும் மேலும் அவர் எல்லா வளங்களும் பெற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை பிரார்த்திக்கின்றோம்.