Vallalar Universal Mission Trust   ramnad......
மாதப்பூசம் 06/12/2009

மாதப்பூசம் 06/12/2009

வழக்கம்போல் இராமநாதபுரத்தில் இருந்து மாதப்பூசம் வடலூர் சென்றிருந்தோம், ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக அளவில் மக்கள் கூட்டம் இருந்தது. இராமநாதபுரம்மாவட்ட தங்கல் மனை வடலூரில் மலேசிய அன்பர்கள் கடந்த ஒருவாரமாக தங்கி உள்ளனர். மேலும் மலேசியாவில் இருந்து வந்த அன்பர்களுக்கு திரு சிவகுருநாதன் அய்யா அவர்கள் திருவருட்பா பாடல்களின் அருட்பெருஞ்ஜோதியார் வருகை பற்றிய பல பாடல்களுக்கு விளக்கம் அளித்தார். மேலும் சேலம் மாவட்டம், மதுரை, முதுகுளத்தூர், பாண்டிச்சேரி இன்னும் பல மாவட்டங்களிலிருந்தும் பல்வேறுஅன்பர்கள் வந்திருந்தனர். வள்ளலார் அறநிலையம் இராமநாதரபுரத்தில் வெளியிட்ட வள்ளலார் நாட்காட்டி 2010க்கு வடலூரில் அன்பர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. பாண்டிச்சேரி அரியாங்குப்பத்தில் சன்மார்க்க அன்பர் திரு ஜோதிமுருகன் அய்யாவின் நண்பர் ஒருவர் வள்ளலார் நாட்காட்டி அனைவரிடமும் இருக்கவேண்டும் என்று இராமநாதபுரத்தில் இருந்து கொண்டு சென்ற 100 காலண்டர்களில் ஐம்பது நாட்காட்டியை அவர் எடுத்துச் சென்றார். மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தங்கல் மனையில் வாயிலில் ஓடும் வாய்க்காலில் ( நெய்வேலியில் இருந்து நிலக்கரி எடுக்கும்போது வெளியேறும் தண்ணீர்) ஒரு பாம்பு குடியிருந்து வருகின்றது. அதை திரு சிவகுருநாதன் அய்யா அவர்கள் ஜீவகாருண்ய அடிப்படையில் யாரும் பாம்பை அடிக்காதீர்கள் என்று வேண்டி அதை பாதுகாத்து வருகின்றார்கள். கடந்த ஒருமாதகாலமாக அந்தப்பாம்பு அங்கேயே (இராமநாதபுரம் தங்கல் மனையின் வாயிலில்) உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சன்மார்க்க அன்பர்களின் அதிகபேர் தேவையாக அருட்பெருஞ்ஜோதி அகவலுக்கு சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதிய உரையாகும். ஒவ்வொரு மாதப்பூசத்திற்கும் குறைந்தது பத்துப்பேராவது கேட்கின்றார்கள். வழக்கம்போல் திரு சிவகுருநாதன் அய்யா அவர்கள் ஞானசபையில் தூய்மைப்படுத்தும் பணியினை வழக்கம்போல் செய்து வருகின்றார்கள்.

வெளிநாட்டில் இருந்து வரும் அன்பர்கள் பலர் ஒவ்வொருமாதப்பூசத்திற்கும் வடலூர் வரமுடியவில்லையே என்ற ஆதங்கத்தில் உள்ளனர். நம்மில் எத்தனைபேர் மாதப்பூசத்திற்கு வடலூர் செல்கின்றோம் என்று தெரியவில்லை. கேட்டால் ஆவணி ஞாயிற்றுக்கிழமை, புரட்டாசி சனிக்கிழமை, அமாவாசை பெளர்ணமி என்று பல காரணங்களை கூறுகின்றார்கள். வடலூரிலேயே பூசத்தன்று அதிகாலையிலேயே பல்வேறு இடங்களில் இறைச்சிக் கடைகள் திறக்கப்பட்டு வெகுவிமரிசையாக வியாபாரம் நடந்துகொண்டிருக்கின்றது. மாண்புமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தைப்பூசத்தன்று இறைச்சிக்கடைகள் மூட உத்திரவிட்டதுபோல் ஒவ்வொரு மாதப்பூசத்தன்றும் மூட உத்திரவிட வேண்டுமென்று சன்மார்க்க அன்பர்களின் சார்பாக வேண்டுகின்றோம். மேலும் தைப்பூசத்தன்று ஒவ்வொரு மாவட்டத்திலுருந்தும் வடலூருக்கு பெருமளவில் பொதுமக்கள் வருவதால் தைப்பூசத்தன்று அரசு விடுமுறை அளித்தால் மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

hariharan_82
பாம்பினையும் வளர்க்கும் பண்பு பாராட்டுதற்குரியது.
அதற்குள்ளும் ..வள்ளலார் சுவாமிகள் சொன்னது போல,.
இருப்பது,,,ஒரு ஆன்மாதானே...
தைப்பூசத்தன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும்
லீவு விட்டார்கள் என்றால் அனைவருமே, வந்து பூச ஜோதி தரிசனம்
காண்பதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.
நல்ல சஜஷன்.
Monday, December 7, 2009 at 23:43 pm by hariharan_82