Vallalar Universal Mission Trust   ramnad......
சங்கத்தைச் சார்வீர்

சங்கத்தைச் சார்வீர்

அகத்தே கருத்துப் புறத்தே வெளுத்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்தடைவித்திடுதற்கென்றே பிறந்த (இறைவன் வருவிக்க வந்துற்ற) பெருமானாகிய இராமலிங்க அடிகள் சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர்” என மக்களை கூவி அழைத்தார்கள்.

ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை

நாடாதீர் பொய் உலகை நம்பாதீர் வாடாதீர்

சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரிந்தினி இங்

கென்மார்க்கமும் ஒன்றாமே

மார்க்கம் எலாம் ஒன்றாகும் மாநிலத்தீர் வாய்மை இது

தூக்கம் எலாம் நீக்கி துணிந்துளத்தே ஏக்கம் விட்டுச்

சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின் சத்தியம் நீர்

நன்மார்க்கம் சேர்வீர் இந் நாள்.

சுத்த சிவ நிலை

சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர், சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின்’ எனக் கூவி அழைக்கும் அடிகள்’ இனி எவ்வுயிரும் சன்மார்க்க சங்கந்தனை அடையச் செய்வித்தே என்மார்க்கம் காண்பேன்” என வாய்ப்பறை யார்ப்பர்.

எவ்வுலகும் அண்டங்கள் எத்தனையும் நான்காண

இவ்வுலகில் எந்தை எனக்களித்தான் எவ்வுயிரும்

சன்மார்க்க சங்கம் தனை அடையச் செய்வித்தே

என்மார்க்கம் காண்பேன் இனி

சுத்த சிவ நிலை

சமரச சன்மார்க்க சங்கத்தை ஏற்படுத்துவதற் கென்றே வள்ளற் பெருமான் பிறந்தவர். இதற்கென்றே இந்தக் காலத்தில் இறைவன் பெருமானைப் பிறப்பித்தான். அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்தடைவித்திடவும் அடைந்த அவரெல்லாம் இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடவுமென்ற தன்னை இக்காலத்தில் இறைவன் வருவித்தான் என இராமலிங்க அடிகள் கூறுவர்.

அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்

திருந்த உலகர் அனைவரையும்

சகத்தே திருத்திச் சன்மார்க்க

சங்கத் தடைவித்திட அவரும்

இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந்

திடுதற் கென்றே எனை இந்த

உகத்தே இறைவன் வருவிக்க

உற்றேன் அருளைப்பெற்றேனே

vallalarspace.com/vumt

3 Comments
hariharan_82
There are so many Associations in our Country. For getting the correct benefit, Vallalar identify to which Association a human being has to enrol.
Thanks for the article
Monday, November 30, 2009 at 08:17 am by hariharan_82
hariharan_82
சதா அருட்பெருஞ்ஜோதியையே நினைத்து அதுவாக வேண்டும் என வள்ளலார் சுவாமி அவர்கள்
சொல்லி சென்றுள்ளார். நல்ல கருத்துக்கள் இங்கே எடுத்துக் கூறப்பட்டுள்ளன.
நன்றி.
Monday, November 30, 2009 at 08:46 am by hariharan_82
hariharan_82
தமிழ் நாட்டில் தற்போது சன்மார்க்க சங்கங்கள் அனைத்துமே வள்ளலாரின் நெறியினை நன்கு பரப்பி வருகின்றன. வள்ளலார் சுவாமியின் வருவிக்க உற்ற நாளில், மதுரையில் அனைத்து சன்மார்க்க சங்கங்களும் ஒரு நல்ல விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்தின. நன்றி.
Monday, November 30, 2009 at 23:23 pm by hariharan_82