Vallalar Universal Mission Trust   ramnad......
.. மூவகைச் சித்து

மூவகைச் சித்து

இராமலிங்க அடிகள் ஆடுறு சித்திகள் அறுபத்து நான்கெழு கோடியும் விளக்கும் அருட்பெரும் பொருளே” என்ற அருட்பா வரிகளில், சித்துக்கள் அறுபத்து நான்கெழு கோடி” என்கின்றார்.

பொதுவாகச் சித்திகளை 1) கரும சித்தி 2) யோகசித்தி 3)ஞான சித்தி என மூன்று வகையாகத் தொகுக்கின்றார் இராமலிங்க அடிகளார் இதனை

மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்

ஆவகை எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி

கருமசித்திகளின் கலைபல கோடியும்

அரசுற எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி

யோகசித்திகள் வகை உறுபல கோடியும்

ஆக என் றெனக்கருள் அருட்பெருஞ்ஜோதி

ஞானசித்தி யின் வகை கள் விரி வனைத்தும்

ஆனியின் றெனக்கருள் அருட்பெருஞ்ஜோதி

என்ற அருட்பெருஞோதி அகவல்’ வரிகளால் அறிகிறோம்.

பொதுவாக அட்டமா சித்தி” என்பதே வழக்கு இதனை, அட்டமா சித்திகளும் நினது ஏவல் செய்யும்” என்ற அருட்பா வரியில் இராமலிங்க அடிகளாரும் ஒப்புக்கொள்கின்றார்.

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

.பொ.சிவஞானம்..

vallalarspace.com/vumt