மண்கட்டி கதை
“ஜீவகாருண்யம் “ என்றால் “ உயிருள்ள ஜீவர்களிடத்து கருணை காட்டுவது” என்றே எல்லோரும் பொருள் கொள்வர். வள்ளலாரைச் சுற்றியிருந்த சீடர்களும் அப்படித்தான் கருனர். அவர்களுக்கு ஒரு நாள் வள்ளலார் உபதேசித்தாவது:
“மக்களிடத்தும் மாக்களிடத்தும் கருணை காட்டுவதோடு ஜீவகாருண்யம் முடிவுபெற்றுவிடாது: அது இன்னும் பரந்து செல்வது. உதாரணமாக ஒரு கதை சொல்லுகிறேன் கேளுங்கள்!
“ அன்பர்களே! இரு முதியவர்கள் ஒரு வீதி வழியே சென்றுகொண்டிருந்தனர். அப்பொழுது அவருள் ஒருவரின் கால்பட்டு வீதியிற் கிடந்த ஒரு மண் கட்டி உடைந்து போயிற்று. அதைக்கண்ட மற்றவர் உடனே மூர்ச்சையானார். மூர்ச்சையடைந்த அவருக்கு உபசாரங்கள் செய்து மூர்ச்சையைத் தெளிவித்து – முன்னையவர், தாங்கள் மூர்ச்சையுற்ற காரணம் என்னை? என வினவ , அதற்கு அம்முதியவர் ‘ உம்முடைய காலினால் அவ்வழகிய மண்கட்டி உடைந்து உருக்குலைந்து போனதே காரணம் ‘ எனக் கூறினார்.
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
ம.பொ.சிவஞானம்…..