கண்புருவப்பூட்டு
மனிதருடைய முகத்தில் புருவ நடுவே நெற்றிக் கண் ஒன்று உண்டென்றும், ஆசாரியன் துணையால் அதனைத் திறந்து கொண்டவரே ஞானி என்றும் சித்தி வளாகத்தில் இராமலிங்க அடிகளார் செய்த உபதேசம் அவருடைய பாடல்கள் சிலவற்றாலும் உறுதிப்படுத்தப்படுகின்றது.
“கையறவி லாதுநடுக் கண்புருவப்பூட்டு
கண்டுகளி கொண்டு திறந் துண்டு நடு நாட்டு”
தனித்தபர நாதமுடித் தலத்தின் மிசைத் தலத்தே
தலைவரெலாம் வணங்கிநின்ற தலைவன் நடராசன்
இனித்தசுகம் அறிந்து கொளா இளம் பருவந் தனிலே
என்புருவ நடு இருந்தான் பின்பு கண்டேன் இல்லை”
“கண்களிக்கப் புகைசிறிதும் காட்டாதே புருவக்
கலைநடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே”
சிவபிரான் நெற்றிக்கண் படைத்தவன் என்ற புராணக் கற்பனையும் , இராமலிங்க அடிகளாரின் இந்த உபதேசத்தை உறுதிப்படுத்துவதாகும். இறைவன் ஒளி அல்லது அறிவுமயமாயிருக்குமிடம் இதுவென்பதைக் காட்டவே நம் நாட்டாரில் ஆண்கள் சந்தனமும், பெண்கள் குங்குமமும், நெற்றியிலிடும் வழக்கம் தொன்றுதொட்டே இருந்து வந்தது போலும்!
இராமலிங்க அடிகளார்
“ நெற்ரியில் தோன்றாதிருப்பது மேல்படி இடத்தில் ஆன்ம விளக்கம் விசேஷமுள்ளதுமென்றும், அறிவிட மென்றும் லலாட மென்றும், முச்சுடர் இடமென்றும், முச்சந்தி மூலமென்றும், மகாமேரு வென்றும் புருவமத்தி என்றும் , சிற்சபா அங்கமென்றும் பெயர். என்கின்றார் . இந்த ஞானம் கண்ணைத் திறந்து கொள்வதற்குத் தியானம் மிக மிக இன்றியமையாத தாகும். அதனால்,
“ தியானஞ் செய்யவேண்டுமானால் , ஏதாவது ஒரு உருவத்தைத் தியானிக்கவேண்டும். நிஷ்களமாயிருக்கப்படாது. பின், உருவம் கரைந்து அருவமாகும். துவைதமாக இருந்தால், அத்துவைதம் தானே ஆகும். எப்படி எனில் , பார்க்கும்தான் கெடுவது அத்வைதம், பார்க்கப்படும் பொருளும் கெடுவது அதீதம்.
“ தங்களைப் பார்க்க வேண்டுமானால் என்னைப் பாருங்கள்; என்னைப்பார்க்க வேண்டுமானால் தங்களை பாருங்கள், தங்களைப்பார்த்தால் என்னை பார்ப்பீர்கள், என்னைப்பார்த்தால் தங்களைப் பார்ப்பீர்கள்”
என்கிறார் இந்த உபதேசத்தின் பொருளைத் தம்முடைய பிள்ளைப் பருவத்திலேயே நிலைகண்ணாடியை எதிரேவைத்து, அதிலே தணிகை வேலனை அவர் கண்டதனா லறியலாம். “ கடவுளைக் காண உண்மையாய் விரும்பினால் , அழுத கண்ணீர் மாறுமா, ஆகாரத்தில் இச்சை செல்லுமா? என்பதும் இராமலிங்க அடிகள் உபதேசம்.
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, ம.பொ.சிவஞானம்...