திருவடிப்புகழ்ச்சி பாடல் வரிகள் 21
(21) பரமபோ தம்போத ரகிதசகி தம்சம்
பவாதீத அப்ரமேயம்
(ப-ரை) பரம போதம் – மிகத் தெளிந்த தெளிவுமயம்; போத ரகித சகிதம் – தெளிந்த தெளிவிற்கும் எட்டாமல் உடன் இருக்கும் உறவுமயம்; சம்பவ அதீதம் – தோன்றும் தோற்றங்கட்கு எல்லாம் தூரமயம்;’ அப்பிரமேயம் - )( முன்னின்று) அளவிட முடியா முழுமை மயம் (எ-று)
(வி-ரை) “ நின்றசிவம் ஒன்று; அதனைத் தேர்தல் ஞானம் ; நிகழ்போதம் தேர்த்தனைத் தெளியலாம்’ என்று கடவுள் மாமுனிவர் கருதியபடி, போதம் என்பது, ஆய்ந்து, அறிந்தவற்றில் அரிய தெளிவு பெற்று அமைதல், எனவே, அதிரகஸ்யமான தெளிவுமயமே ‘ பரமபோதம் ‘
முதன்மைத் தெளிவுடையேம் எனும் முனைப்புறின், அம் முனைப்பில் இருந்து அகன்று, உணர்த்த உணர்வில் மட்டும் உறவு பூண்டுள பரம். “ போந ரஹித சகிதம்’ எனப்பெறும். ( சம்பவம்- (புதையல் பொருள் போல் மறைந்து) தோன்றுவது.
சாதனைச் சார்பிலாதார் நிலை, வெறும் கோரணியான குழப்பக் கூத்து, அவர்கட்கு இது ஒரு எச்சரிக்கை போலுளது அல்லவா. “ தன்னிழப்பை என்ன கற்று சாதிப்பான்” என்பத் ஒழிவிலொடுக்கம் பிரமேயம் – அளவிட்டறிவது; அ-இன்மை ‘ எனவே அப்ரமேயம் என்பது,. அளவிட முடியா அளவினது எனும் பொருட்டு.