Vallalar Universal Mission Trust   ramnad......
மாதப்பூசம் வடலூர் 12/10/09

மாதப்பூசம் வடலூர் 12/10/09

வழக்கம் போல் இராமநாதபுரத்திலிருந்து மாதப்பூசத்திற்கு வடலூர் சென்றோம். கட்டிட மராமத்துப்பணிக்காக உடன் இரண்டு கார்ப்பெண்டர்களள அழைத்துச் சென்றிருந்தோம். இந்தமாதப்பூசத்திற்கு வழக்கம்போல் பல்வேறு மாவட்ட சன்மார்க்க அன்பர்கள் வருகைதந்திருந்தார்கள். தீஞ்சுவை நீரோடையைசுற்றி தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெறுவதாகவும் மேலும் நீரோடையைச்சுற்றி வேலிஅமைப்பதாகவும் தகவல். மேலும் வடலூரில் உள்ள இராமநாதபுரம் வள்ளலார் அறநிலைய கட்டிடத்தில் உள்ள அன்பர்கள் அனைவருக்கும் தீபாவளிப் புத்தாடைகள் இராமநாதபுரத்தில் உள்ள அன்பர் ஒருவர் வழங்கியிருந்தார். அனைவருக்கு அளிக்கப்பட்டது. மேலும் தைப்பூசம் ஜனவரி 30(சனிக்கிழமை) அன்று வருவதால் இப்பொழுதிருந்தே தைப்பூச வேலைகள் தொடங்கிவிட்டன. மேலும் இராமநாதபுரம் தங்கல் மனையில் உள்ள ஐயா சிவகுருநாதன் அவர்கள் வழக்கம்போல் ஞானசபை, மற்றும் தர்மச்சாலை சுற்றிலும் தூய்மைப்படுத்தும் பணியைசெய்து வருகின்றார்.

vallalarspace.com/vumt