Vallalar Universal Mission Trust   ramnad......
திருவடிப்புகழ்ச்சி பாடல் வரிகள் 18 (18) பரமகரு ணாம்பரம் தற்பதம் கனசொற் பதாந்தம் இன்ப வடிவம்

திருவடிப்புகழ்ச்சி பாடல் வரிகள் 18

(18) பரமகரு ணாம்பரம் தற்பதம் கனசொற்

பதாந்தம் இன்ப வடிவம்

(-ரை) பரம கருணாம்பரம் அதிநுட்பமான அருளாகாயம்; தத் பதம் (மகா வாக்கியத்துள் இருக்கும்) அது எனும் பதம் ஆனது: கன சொல் பத அதீதம் பருமை மொழிகட்கும், பதங்கட்கும் எட்டாதது; இன்ப வடிவம் ( இயற்கையான) இன்ப சொரூபமாக இலங்குஅது ( -று)

எங்கே கருணை இயற்கையின் உள்ளன

அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி”

எனும் பகுதியை இங்கு எண்ணலாம்.

தத்வமசி என்பது, மகாவாக்கியங்கள் நான்கனுள் ஒன்று; தத் அது; த்வம்நீ; அசி ஆகிறாய் என்பது இதன் பொருள் . இதனில் அது’எனும் பொருள் தரும் தத்பதமே பரம்.

ஒலி எழுத்தாகும்; எழுத்து பதமாகும்;; பதம் சொல்லாகும் சொன்னது சொன்னபடியே பலிக்கும் ஆற்றல் ஞானிகளின் சொற்கட்கு உண்டு. எழுத்தின் நுட்பம் பதங்களிலும், பதங்களின் நுட்பம் சொற்களின் நுட்பம் சொல்பவர் உணர்விலிருந்தும் வெளிப்படும், இச் சொற்களும் பதங்களும் அற்புதம் ஆனவை.

“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி”

அனைத்தும் மந்திரங்கள் ஆகும் அற்புதமே அற்புதம்”

கனபதம், கன சொற்பதம் என இவைகளை இயைத்துப் பொருளுணர் பொழுது, எவரது இதயமும் நெகிழ்தலுறும். கனம் கனந்தங்கிய தன்மை; கனமாவது அற்புத மகிமை;

ஆதி அனாதியும் ஆகி எனக்(கு)

ஆநந்தமாய் அறிவாகி யிலங்கும்

ஜோதி மவுனியாய்த் தோன்றி அவன்

சொல்லாத வார்த்தையைச் சொன்னாண்டி தோழி

சொன்ன சொல் ஏதென்று சொல்வேன் என்னைச்

சூதாய்த் தனிக்கவே சும்மா இருத்தி

முன்னிலை ஏதும் இல்லாதே சுகம்

முற்றச் செய்தே என்னை பற்றிக் கொண்டாண்டி”

என்று தாயுமானாரும்

தோழமை என்றவர் சொல்லிய சொல்

ஒரு சொல்லன்றோ

என்று இராமயண குகப்பெருமாளும் கூறிய குறிப்பு இங்கு குணிக்கத் தகும்.

அனுபூதிமான்கள் அறிவிக்கும் அக் கனசொற் பதங்களைத் தமதாக்கி , இது பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல். உரிச்சொல், பகுபதம், பகாப்பதம், எனச் சொல்லால் முழக்கிலோ சுகமில்லை, உண்மையில் சும்மா இருப்பதே பேறு. ஓசையும் ஒலியுமான சொற்கள், பதங்கட்கு எட்டாத பரவஸ்து என்று படித்தபடி.

சொற்பதம் கடந்த தொல்லோன்” என்பது திருவாசகம், சொற்பதம் கடந்த ஜோதி” என்பர் பரஞ்ஜோதியார். இன்றுவரை எழுந்த சொற்களும் பதங்களும் பரத்தைத் தொட்டறிய முடியாமல் தோல்வியடைந்த கதையைப் புலவர்கள் உலகம் புரிந்து கொண்டுளது.

இன்பத்தின் பண்பில் இறை சொரூபம் ஆதலின், : இன்ப வடிவம் என்றார் .

ஆநந்தமே குகப் பிரமம் என்பது ஆன்றோர் களது அறிவிப்பு.

திருவடிப்புகழ்ச்சி,

குகத்திரு இரசபதிஅடிகள் உரை/

vallalarspace.com/vumt