Vallalar Universal Mission Trust   ramnad......
திருவடிப்புகழ்ச்சி பாடல் வரிகள் 17)


(17) பாதுரிய அனுபவம் குருதுரிய பதம் அம்

பசும்பகா தீத விமலம்

(-ரை) பரதுரிய அனுபவம் வித்தகத் துரிய நிலையில் அனுபவமாக விளங்குவது : குருதுரிய பதம் குருவின் துரிய உபதேசமாகக் குறுகுவது; அம்பகம் (காணும்) கண்ணாவது ; பசு அதீத விமலம் ( திரு ஐஸ்வர்யம், புகழ், வீரம், வைராக்யம் , ஞானம் எனும்) ஆறு நிலைகட்கும் அப்பாற்பட்ட களங்கமற்ற தன்மையது, (-று)

(வி-ரை) விழிப்பு, கனவு, அவசம், எனும் மூன்றிற்கும் அப்பாற்பட்ட நான்காவது நிலை துரியம், இது அபரம், இதற்கு மேல் அதி நுட்பமானது பரதுரியம். பெருகிய அனுபூதி மான்கட்கு , உள்ளங்கை நெல்லிபோல் அந்நிலை உருவாகுமாதலின், பரதுரிய அனுபவம்’ எனப்பெற்றது.

என்றும் உயிர்கள் மேல் வைத்த இரக்கத்தால், வித்தகப் பரம், பரம குருவுருவில் வெளிப்படும்’; உரிய துரிய பதத்தை உபதேசிக்கும். அந்தச் சூழ்நிலையே குரு துரிய பதம்’ இதன் வழி, சிறந்த பரதுரியம் சித்திக்கும். (இந்த நன்றிக்கு அடையாளமாக, குருபூஜை எங்கும் கொண்டாடப்படுகிறது)

(கு-இருள் ; ரு ஒளி) அறியாமை இருளகற்றி அருள் ஒளியை அறிவித்தலின், இவர்க்குக் குரு எனும் பெயர் கூடியளது.

கரையறு பிறவிவெங் கடலுளே விழுந்(து)

அயர்வுறு துயருழந் தவர் ஐயோ என

விரைவொடு வினைகெட நோக்கி, வேதகக்

கரையினை அருள்பவன் கருணை நன்குரு”

இவ்வளவு தானா? எங்கிருந்து வந்தார் குருநாதர்!

அகனமாய் யாரும் அறிவரி(து) அப்பொருள்

சகளமாய் வந்த(து) என் ( று) உந்தீபற

தானாகத் தந்தென்(று) உந்தீபற”

என்று கூறும் திருவுந்தியார், பராபர வஸ்து குருபரனாக வந்து,சீவனைத் தன்போல் சிவமாக்குவித்தது என்று, அருமை நடையில் அறிவிக்கின்றது.

அரிய இந்நிலையை என்றும் அனுபவிக்க, (பரம ஞான) அம்பகம் ஆகின்றது பரம். (அம்பகம் ( அக நோக்கு)

கண்ணே ! கண்ணிற் கருமணியே! மணியோடு பாவாய்

காவாய்! எனத் தமிழ் மறையும்

காணும் கண்ணிற் கலந்த கண்ணே! உன்னைச்

சேணும் பாரும் திரிபவர் காண்பரோ”

என்று அரிய தாயுமானாரும் அறிவித்துளர்.

பதம் எனும் வடசொற்கு, ஆறு என்பது பொருள், அந்த ஆறு நிலை யாதெனப் பதவுரையில் விளக்கப் பெற்றளது. மேலும் அம்பகம் என்பது , பகம் என முதற் குறைந்தது எனக் கொண்டு, உணர்வு நோக்கிற்கு அன்றி ஊனக் கண்கட்கு அப்பாற்பட்டது எனினுமாம். இப்பகுதியை, நினைவார் நெஞ்சம் நெகிழ்தலுறும்.

திருவடிப்புகழ்ச்சி.

குகத்திரு இரசபதி அடிகள்

vallalarspace.com/vumt