(15) பகர்சுபர வம்புனிதம் அதுலமது லிதமம்
பராம்பர நிரா லம்பனம்
(ப-ரை) பகர் சுபாவம் – போற்றப் பெறுகின்ற இயற்கை மயமாக இலங்குவது; புனிதம் –(இயற்கைத்) தூய்மையானது; அஹ்டுலம் ( எவ்வகையாலும்) ஒப்பு இல்லாதது; அதுலிதம் – அசைவு இல்லாதது; அம்பர அம்பரம் – விண்ணில் ( ஞான) விண்ணாகி விளங்குவது; நீர் ஆலம்பனம் – என்றும் ( தனக் கொரு) புகலிடம் இல்லாதது( எ-று)
( வி-ரை) எ+பாவம் – சுவாபம் எனக்கொண்டு, சுத்த பாவனை செய்தற்கு இடமானது என்றும், புனித மதுலம் – இனிய தேனாக இருப்பது என்றும், மதுலிதம் – இன்பக் கொழுமையாக இருப்பது என்றும், நிர் ஆலம்பனம் _ ( என்றும்) தாமதம் இல்லாத்து என்றும் பொருள் கொள்ள இடமுண்டு.
இயம்பில் அழுக்கு இல்லாதத்து; செயற்கையிலும் அழுக்குச் சேராதது ஆதலின் . பகர் புனிதம் என்றார். வாக்கு மனம் காயம் மூன்றற்கும் அப்பாற்பட்டது; சொற் பிரபஞ்சமான நூல்கட்கும், பொருட் பிரபஞ்சமான தத்துவங்கட்கும் எட்டாதது ஆதலின், ‘ அதுலம் ‘ எனப்பெற்றதுல் நீக்கமற எங்கும் நிறைந்தது எனில்.அசைவிற்கு ஏது இடம் ? எனினும் இது ;’ ‘ அதுலிதம்’ என்று, துதித்து மறைகள் தொழுகின்றன.
ஆகாயம் பல எனலை முன்னர் அறிந்துளம்; அவைகட்கு எல்லாம் உயிரான ஆகாயம், ‘ அம்பராம்பரம் ‘ அறியப் பெறும்.
எதற்கும் எவர்க்கும் காப்பாவது அன்றி, என்றும் தனக்கொரு புகலிடம் இல்லாதது ஆதலின் ‘ நிர் ஆலம்பனம்’ எனும் அருமை மறக்க முடிவதில்லை.
திருவருட்பா
திருவடிப்புகழ்ச்சி,
குகத்திரு இரசபதிஅடிகள் உரை…