(7) படநவே தாந்தாந்தம் ஆகமாந்திரு
பாதிகம் பரம சாந்தம்
(பதவுரை) படந வேதாந்த அந்தம் – பாராயணம் செய்தற்கு உரிய உபநிடதங்களின் உச்சிக்கு மேலே உயர்வது; ஆகம அந்த அந்தம் – ஆகம வழிபாட்டின் இறுதிக்கும் அப்பாற்பட்டதி; நிர் உபாதிக- (எந்தத்) துன்பமும் இல்லாதது; பரம சாந்தம்-புனித அமைதி பொருந்தியதும்( எ – று)
(விரிவுரை) வேதத்திற்குப் பகுதி வித் ; ஞானம், என்பது பகுதிக்குப் பொருள். வேதத்தைப் பாராயணம் செய்தலைப், படநம் செய்தல் என்பது சம்பிரதாயம். உயர்ந்த அம்மறைகளின் சாரமான முடிபுகட்கு, உபநிஷத்துக்கள் என்று பெய்ர். இப்படி நூற்றெட்டு உபநிஷத்துக்கள் இருக்கின்றன.
மறைகளை முனிவர்கள் அருளினர். ஆகமங்களைச் சாதாசிவம் அருளியது.. ஞானபாதம், யோகபாதம், கிரியா பாதம், சரியாபாதம் எனும் நான்கு பாதங்களால் ஆகமங்கள் நடக்கும். காமிகம் முதல் வாதுளம் ஈறாக இருபத்தெட்டு ஆகமங்கள் இருக்கின்றன.
ஓயாது வேதங்களை ஓதினால் ஒருமை ஞானம் உதிக்கும். அவ்வுணர்வோடு இறையை ஆராதித்து, சிவமயமாகும் சீவன்.
நீ பிரமம் என்னும் வேதம், வாயால் சொன்னால் போதுமா? வித்தகச் செயலில் அது விளங்கும் ; புரிகிறதா? என்று, ஆமகங்கள் எப்போதும் அறிவிக்கும் . வேதம் கூறுவது அபேதம்; ஆகமத்தின் அறிவிப்பு பேதம், இவைகள் ஒன்றை ஒன்று முரணுவ போல் தோன்றும்.
“ வேத ஆகமச் சென்னியில் விளைபொருள் அபேதம்
பேதமாகிய பிணக்கறுத்து, இருள்பிணி அவிழ்த்து
நாத னாகிய தன்னையும் என்னையும் நல்கும்
போதனாகிய குருபரன் வருவதெப் பொழுதால்;
என்று இதயம் நெகிழ்து, இறைஞ்சி யிருந்தால், திருவருள் குருமுகமாகி , இனிய வழிபாட்டில் ஈடுபடுத்து, அரிய இச் சிக்கலை, அவிழ்த்துவிடும், நான் எனமுனைத்திருந்த சீவனைத் தானாக்கி உய்விக்கும். இது என்றும் உள்ள செய்தி. எவரும் கூறும் வாய்மை. ஆரம்பத்தில். ஆராதனையில் அழுந்திய ஈடுபாடு, அவசியம் தேவை. இதற்கு மாறான வாப்பத்தால், வாதநடை , இதனால் ஆயுள் நாள் வீணே விரையம் ஆய்விடும்.
பாராயணம் செய்வது வேதப்பயன். அதனுடன் சன்மார்க்கிகளைச் சிவமாகாப் பாவித்து , அவர்களோடு சார்ந்து, ஐந்தெழுத்தில் உறவு கொண்டு அமைந்தால், அதனில் உள்ள ஒவ்வொருஎழுத்திலும் இருந்து ஒளி எழும், வரவர அது வளரும். அதன்பின் ஆன்மா, நின்மல இன்பக் கடலில் நீந்தி யின்புறும். இதனை ரூபகாலங்காரம் செய்து.
“ சுனையைக் கலக்கி விளையாடும்
சொரூபக் குறத்தி மணவாளா”
என்று குறிப்புப் பொருள் வெளிப்படக் கூறுவர் மேலோர்.
இயந்திரம்போல் உரியபொருளை உணராமல் ஓதுவது, ஓதிய வண்ணம் ஒழுகாமையுமாயின் , சிறந்த இவ்வனுபவம் சித்திப்பது இல்லை.
“ வேதக் காட்சிக்கும் , உபநிடத் துச்சியில் விரிந்த
போதக் காட்சிக்கும் காணலன்”
என்று ஆகிவிடும் செய்தி, வேத சாரம், திருவருட்பா, உப நிடத சாரம் திரு அருட்பா, ஆகம சாரம் திருவருட்பா, அநுட்டான சார அறிவிப்பு திருவருட்பா, பாராயணம் செய்வம், செயல்படுவோம். இதன் வழி எட்டாதன எட்டும் கிட்டாதன கிட்டும். அனைத்தும் அறிவேன் என்னும் அகங்காரம் அழியும், “ பாடத வேதாந்தாந்தம் ஆகமாந்தாந்தம் என்பதை உணர்ந்து இங்கு ஓதும்போது, ஓம், ஓம் ஓம் என்கிறது நம் உணர்வு. இந்த ஈடுபாட்டில் இருப்பவர்தம் அடிப்பொடி நம்முடி, என்று அதனை நம் உள்ளம் ஆவலிக்கிறாது அல்லவா?
உவர்க்கடலில் பிறந்து வளர்ந்த மீன்களின் உடல்களில், அவ்வுபுத் தனை உறவாடியது இல்லை. தண்ணீரில் பிறந்து வளர்ந்த தாமரை இலைகளில் தன்ணீர் ஒட்டு பற்று ஒருநாளும் இல்லை. அதுபோல் உபாதிகள் பலவுடைய உயிர்களில் அநாதி நித்தியமாக இருந்தும், அவ்வுயிர்களின் வினைகளிலும் அதன் வழிவகும் இன்பு துன்புகளிலும் ஒட்டாது. பற்றாது உறவுகொள்ளும் பரசிவத்தை, ‘ திருபாதிகம்’ என்றார். ) உபாதிகம் – துன்பம் , நிர் – இல்லாமை)
எப்படியுளது பரசிவம் என்பார்க்கு அது ‘ மெளன ராஜாங்கத்தில் அமர்ந்தது; என்றார் தாயுமானார். அதை நம் வள்ளலார் ‘ பரம சாந்தம்’ என்று பகர்வார் ஆயினார். ஓம் சாந்தி சாந்தி சாதி; என்பதுதான் மோன இன்ப முழுமை. இதற்கு மேல் எந்தச் சாதனையும் இல்லை. பேசா அணுபூதி பிறந்த இடம் இந்த இடம், அலை ஓய்ந்த கடல் போல் இருக்கும் அமைதிநிலை இந்த நிலை ( ஓம் , ஓம் )
தொடரும்….
திருவருட்பா திருவடிப்புகழ்ச்சி.
குகத்திரு இரசபதி அடிகள்..