Vallalar Universal Mission Trust   ramnad......
திருவடிப்புகழ்ச்சி தொடர்ச்சி பாடல் வரிகள்(6)


(6) பரிசயா தீதம்சு யம்சதோ தயம்வரம்

பரமார்த்த முத்த மெளனம்

(பதவுரை) பரிசய அதீதம் தொட்டு அறிய முடியா அளவு தூரமானது; சுயம் இயற்கை வடிவாக இலங்குவது; சதோதயம் உதயமாகி எப்பொழுதும் இலங்குவது; சதோதயம் உதயமாகி எப்பொழுதும் ஒளிர்வது- வரம் பரிபாகிகளை வரிப்பது; பரமார்த்த முக்த மெளனம் பரம்பொருள் எனும் கட்டற்ற, சொலற்கரிய மோன சொரூபம் ஆனது(-று)

(விரிவுரை) ஆராதனையின் பெயரால் ஆயிரம் தழுவினாலும் அதற்கு அப்பால் ஆனது மெய்ப்பொருள், அந்நிலை பரிசய அதீதம்” எனப் பெற்றது, பரிசயம் பரிசித்தல்; தொடுதல், தடவுதல்; அதீதம் கடந்த நிலை.

தோன்றுதலும், இருத்தலும், தொலைதலும், எங்குமாகியிருக்கும் இயற்கை நிலை; எவர்க்கும் உள்ள செய்தி, தோற்றக் கேடுகள் இன்றி, என்றும் எங்கும் ஒருபடித்தா யிருத்தலின், சுயம் என்றார்.

ஜோதிஜோதிஜோதிசுயம்” என்பதும் இங்கு எண்ணத்தக்கதாகும்.

முன் வரின், இரண்டும் கெட்டு ஆகும் எனும் விதிப்படி சதா உதயம் என்பது சதோதயம் என்றாயது.

கதிரவ்ன் காலையில் உதயம் ஆவன், மாலையின் மேற்குக் கடலுள் மறைவன். இப்பிரகிருதி உலகில் , இது என்றும் எவரும் காணப்பெருவது. தியான யோகிகட்குப் பரசிவ சூரிய வித்தக தரிசனம், எங்கும் எப்போதும் விளைதலின், சதோதயம் என்றார்.

‘’ காலையில் நான் கண்ட ஜோதி எல்லாக்

காட்சியும் நான்காணக் காட்டிய ஜோதி

ஞாலமும் வானுமாம் ஜோதி என்னுள்

நானாகிக் தானாகி நண்ணிய ஜோதி”:

என்பதையிங்கெண்ணுதல் நலம்.

துன்மார்க்கம் கலவாத நன்மார்க்கத்தில் தெளிந்த நெறியினரைத் தேர்ந்து, இம்மை மறுமை யீவது ஆதலின், பரம் வரம் என்ப பெறுகிறது( வரம் . வரித்தல், தேர்ந்து கொள்ளல்)

சன்மார்க்கிகளை வரித்து, பரமார்த்த முக்த மோனத்தில் பயில்விப்பது அப்பரம்,

பரம அர்த்தம்- அதிரகஸ்ய அருட்செல்வம் (பரம அதி நுட்பமான , அர்த்தம். அருள் திரு ( இதையே மெய்ப்பொருள் என்பர் மேலோர்; ( இத்திருவினை எய்தினர் வாளா இரார்’ வாக்காலும், மனத்தாலும் அதை மற்றவர்க்கு வழங்குவர்.

இயல்பில் பற்று இல்லாமல் , செயற்கையிலும் பந்தம் சேராமல் இருப்பது முக்திநிலை; விடுதலை மயமாக விளங்கும் நிலை, மனம் செயலற்று இருப்பதுவே மவுனம் என்பது, கருதி சொல்லும் செய்தி,

பரமார்த்த முக்த மெளனம் என்பதை, உணர்ந்து பத்து தரம் உச்சரித்தால், இனிய அந்நிலை நம்மில் எய்துவதை அறியலாம்.

திருவடிப்புகழ்ச்சி,

குகத்திரு இரசபதிஅடிகள் உரை..

vallalarspace.com/vumt