Vallalar Universal Mission Trust   ramnad......
மாதப்பூசம் 15/09/2009

வழக்கம்போல் இந்தமாதப்பூசத்தன்று பல்வேறுமாவட்டத்தைச்சேர்ந்த சன்மார்க்க அன்பர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தங்கல் மனை வந்துசென்றார்கள். தற்பொழுது இளைஞர்களின் வருகை அதிகரித்துள்ளது. வரவேற்கத்தக்க ஒன்றாகும். மாதப்பூசத்திற்கும் மக்கள் கூட்டம் அதிகளவு அதிகரித்துள்ளது. மேலும் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் வள்ளலார் ஸ்பேஸ் (vallalar space.com) இருப்பதே இன்னும் பல்வேற்று சன்மார்க்க அன்பர்களுக்கு தெரியவில்லை. எனவே இராமநாதபுரம் மாவட்டத்தங்கல் மனையில் ஒரு பழைய கணிப்பொறி ஒன்றை இன்ஸ்டால் செய்து அகண்ட அலைவரிசை (broad band) ஒன்று வாங்கி ஒவ்வொரு மாதப்பூசத்திற்கு வரும் அன்பர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கலாம் என்று எண்ணியுள்ளோம். அடுத்த மாதப்பூசத்திற்குள் அதை செய்து விடலாம் என்று எண்ணியுள்ளோம். அத்துடன் வெப் கேமரா ஒன்றும் இணைத்து உலகெங்கும் உள்ள சன்மார்க்க அன்பர்களுடன் live ஆக தொடர்புகொண்டு சன்மார்க்கத்தினை உலகெங்கும் பரப்ப எண்ணியுள்ளோம். மேலும் இராமநாதபுரம் வள்ளலார் அறநிலையத்திற்கு ஒரு மாருதி ஆம்னி கார் ஒன்று அத்தியாவசியம் தேவைப்படுகின்றது. அதற்கும் ஓர் அன்பர் அந்தத் தொகையில் (ரு.2,40000) ஒரு குறிப்பிட்ட அளவு தந்து உதவுவதாக உறுதியளித்திருக்கின்றார். ஏனென்றால் ஒவ்வொரு மாதப்பூசத்திற்கு இராமநாதபுரத்திலிருந்து வடலூருக்கு இருவர் சென்று வருவதற்கே சுமார் ஆயிரத்து ஏழுநூறு செலவாகின்றது. எல்பிஜி கார் என்றால் ஒவ்வொருமாதப்பூசத்திற்கும் குறைந்தது எட்டுப்பேரையாவது அழைத்து வரலாம் வெறும் எண்ணூறு ரூபாய் செலவில். மேலும் ஒவ்வொரு புதன்கிழமையிலும் உணவுப்பொட்டலங்கள் கொடுப்பதற்கு தற்பொழுது ஆட்டோ உபயோகப்படுத்துகின்றோம், மேலும் முதியோர் கள் எண்ணிக்கை தற்பொழுது அதிகரித்துள்ளது. அவர்களுக்கு ஒரு அவசரசிகிச்சை அளிப்பதற்கு மிகவும் அவசியமாக இருக்கும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் இனிதே நடைபெறும் என்று நினைக்கின்றோம்.

வள்ளலார் அற நிலையம்,இராமநாதபுரம்.