Vallalar Universal Mission Trust   ramnad......
எம்குலம் எம் இனம் என்பது தொண்ணூற்றாறு அங்குலம்…வள்ளலார்

எங்குலம் எம்மினம் என்பதொண்ணூற்றா

றங்குலம் என்றருள் அருட்பெருஞ்ஜோதி..

அருட்பெருஞ்ஜோதி அகவல்219-220

தொண்ணூற்றாறு அங்குலம் என்றது உடம்பை, உடம்பு அவரவர் கையால் எட்டுச்சாண் ஒரு சாண் பன்னிரண்டங்குலம். எட்டுச் சாண் 96 அங்குலம். எம் குலம், எம் இனம் என்பது எண் சாண் (96 அங்குல) உடம்புக்கே ஒழிய அவ் உடம்பின் உறு பொருளாகிய உயிருக்கன்று என்பது கருத்து. இதனை அருட்பெருஞ்ஜோதியே தனக்கு அருளிற்று என்பார், என்றருள் அருட்பெருஞ்ஜோதி என்றார்.

vallalarspace.com/vumt


S Palani
கருணைமிகு நம்மவீர் வந்தனம்,
ஒரு சாண் என்பது அவரவர் கைகளில் கட்டை விரல் நுனியிலிருந்து சுண்டு விரல் நுனி வரை கைகள்விரிந்த நிலையில் இருக்கும் போது இடைபட்ட தூரமாகும். முழம் என்பது மோதிர விரல் நுனியிலிருந்து முழவு எலும்பு நுனிவரை உள்ளதூரமாகும். மனிதனின் உயரம் என்பது அவரவர் கைகளால் எண் சாண் உயரமாகும்.
அளவு அலகு எனும்போது ஒரு சாண்= 9அங்குலம்
2சாண்(அ) ஒருமுழம் =18 அங்குலம்(அ) 1.5 அடி
2முழம்(அ) 4சாண் = 1 கெஜம்.
8சாண்(அ)4முழம் (அ)2கெஜம் = 1 ஆள் உயரம்.
தொண்ணூற்றாறாங்குலம்= தொண்ணூற்றாறாம்+குலம் அதாவது 96 தத்துவங்களை உள்ளடக்கிய மனிதகுலம்.
என்றென்றும் சன்மார்க்க பணியில்,
ஜோதிமைந்தன்.சோ.பழநி.
8 சாண்(அ)4 முழம் (அ)2கெஜம் = 1ஆள் உயரம்
Monday, August 31, 2009 at 06:00 am by S Palani