Vallalar Universal Mission Trust   ramnad......
ஜீவகாருண்யப் பலன்கள் - வள்ளலார்

ஜீவகாருண்யப் பலன்கள்

சூலை, குன்மம், குஷ்டம் முதலிய தீராத வியாதிகளால் வருந்துகின்ற சமுசாரிகள் , தங்கள் தரத்திற்கு ஏற்றபடி பசித்தவர்களுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாகக அனுசரித்தார்களானால் அந்த ஜீவகாருண்ய அனுசரிப்பே நல்ல மருந்தாக அந்த வியாதிகலை நிவர்த்தி செய்து, விசேஷ செளக்கியத்தை உண்டுபண்ணுமென்பது உண்மை உண்மை.

பலநாள் சந்ததியில்லாமல் பல பல விரதங்களைச் செய்து வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தகுந்தபடி பசித்த ஏழைகளது பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த ஜீவகாருண்ய அனுசரிப்பு நல்ல அறிவுள்ள சந்ததியை உண்டுபண்ணு மென்பது உண்மை உண்மை.

அற்பவயதென்று குறிப்பினால் அறிந்து கொண்டு இறந்து போவதற்கு அஞ்சி விசாரப்படுகின்ற சமுசாரிகள், தங்கள் தரத்த்திற்கேற்ப பசித்த ஏழைகளுக்குப் பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்த ஜீவகாருண்ய அனுசரிப்புத் தீர்க்காயுளை உண்டுபண்ணுமென்பது உண்மை உண்மை.

தயவு