
இலவச கண் சிகிச்சை முகாம்
தயவுத்திரு ஜோதிமுருகன் அய்யாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு27/06/2009 அன்று நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில் மொத்தம் 50 பேர் கலந்து கொண்டனர்/ இதில் 10 பேர் இலவச அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேற்படி படத்தில் காணப்படும் பிறந்து ஆறு மாதமான குழந்தைக்கு இரண்டு கண்களிலும் கருவிழிகள் கிடையாது. கண்கள் இரண்டும் கருவிழிகள் இல்லாமல் வெள்ளையாக உள்ளது . இவர்களைப்போல் ஆதரவற்றவர்கள் , முதியோர்கள் போன்று பலரும் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள். முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இது போன்ற இலவச கண்சிகிச்சை முகாம்கள் வருடத்திற்கு நான்குமுறை வள்ளலார் அறநிலையத்தினரால் நடத்தப்பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: இதுபோன்ற இலவச கண்சிகிச்சை முகாம்களில் நமது வள்ளலார் அறநிலையத்தாரால் பராமரிக்கப்படும் ஆதரவற்ற மாணவ மாணவியர்கள்/ மற்றும் முதியோர்களுக்கும் இலவசமாக கண்பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
நன்றி தினமணி;28/06/2009