Vallalar Universal Mission Trust   ramnad......
அம்பலப்பாட்டே, அருட்பாட்டு!

இப்படியே, இறுக்கம் இரத்தின முதலிய ஒரு முறை தமக்கெழுதிய கடிதத்தில் இராமலிங்க சுவாமிகள் என்று குறிப்பிட்டிருக்க கண்டு.

இராமலிங்க சாமியென்று வழங்குவிப்பது என் சம்மதமன்று, என்னை? ஆராவாரத்திற்கு அடுத்த பெயராகத் தோன்றுதலில் , இனி அங்ஙனம் வழங்காமை வேண்டும்.’’ என 28/03/1866ல் தாம் எழுதிய கடிதத்தில் தாம் எழுதிய கடிதத்தில் முதலியாருக்கு அறிவுரை கூறினார்.

இறைவன் தம்முள்ளத்தில் குடிகொண்டு தம்மைப்பாட வைத்ததாக அடிகள் நம்பினார். அதனாலேயே, அருட்பா எனத் தம் பாடற் தொகுதிக்கு பெயரிடச் சம்மதித்தார், இதயத்தில், இறைவனிருந்து பாட வைத்தமனாலேயே நரஸ்துதியாக ஒரு பாட்டும் பாடவில்லை, இதனை

நடராஜர் பாட்டே நறும்பாட்டு

ஞாலத்தார் பாட்டெல்லாம் வெறும்பாட்டு

சிதம்பரப் பாட்டே திருப்பாட்டு

ஜீவர்கள் பாட்டெல்லாந் தெருப்பாட்டு

அம்பலப்பாட்டே அருட்பாட்டு

அல்லாத பாட்டெல்லா மருட்பாட்டு”

எனப்பாடி, தாம் மனிதரைப் பாடாததன் காரணத்தை மறைமுகமாக விளக்குகின்றார். அருட்பா த் தொகுப்பு நூல் வெளியானபிறகு,. பாட்டி தொட்டிகளி லெல்லாம் வள்ளலாரின் பாடல்கள் முழங்கின.