தனித்திரு
‘ தனித்திரு ‘ என்பது, அடிகள் உபதேசித்த இரண்டாவது மகா மந்திரமாகும். தனிமை, மனத்திற்கு இன்பம் தருவதாகும். “ சிவ சிந்தனையுடன் தனித்திருந்தால், பேரின்பம் துய்க்கலாம்” என்கிறார் வள்ளற் பெருமான், ஆரவாரச் சூழ்நிலையில் மனத்தில் இறையுணர்வு பிறக்காது; பிறந்தாலும் நிலைக்காது; அது பற்றியே சாவாத கல்வி பயிலத் ‘ தனிதிருத்’ தல் அவசியமென்றார் இராமலிங்க அடிகளார். ஆனால் மலைக்கோ, வனத்திற்கோஓடித்தனித்திருத்தலை அடிகள் ஆதரிக்க வில்லை. மக்கள் மத்தியிலே வாழ்ந்து, அவர்களுக்குத் தொண்டாற்றி, அடிக்கடி உள்ளொளி பெருக்குவான் வேண்டித் தனித்திருத்தலையே அவர் போதித்தார்.
அரசியற் பெரும் புரட்சிக்கு தளபதியாக இருந்த காலத்தும், ஆரவார மற்ற குக்கிராமத்தில் ஆசிரமம் அமைத்து, அதையே தம் இருப்பிடமாகக் கொண்டார் காந்தியடிகள்.
-- சிதம்பரம் இராமலிங்கம்.
Write a comment