Vallalar Universal Mission Trust   ramnad......
வள்ளலாரைப் பின்பற்றுக

வள்ளலாரைப் பின்பற்றுக

இந்திய தேசிய ஒருமைப்பாட்டினை விரும்புவோருக்கும், உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையை நாடுவோருக்கும் மிகச்சிறந்த வழிகாட்டியாக விளங்குகின்றார் வடலூர் இராமலிங்கர், அவர் கூறிய உலக ஒருமைப்பாட்டை இன்றைய தேசிய சர்வ தேசியவாதிகள் காணவேண்டுமானால் சாதி வேற்றுமைகளை வேரும் வேரடி மண்ணுமில்லாமல் ஒழித்தாக வேண்டும், மத பேதங்களை மறைத்தாக வேண்டும். தெய்வம் உண்டு என்று நம்பி, அதுவும் ஒன்றே என்பதை உள்ளத்தைல் பதியவைத்து . உயிர்கள் தோறும் அத்தெய்வம் காட்சியளிப்பதைக் கண்டு, உயிர்களுக்குத் தொண்டு செய்வதன் மூலம் அந்த ஒரே தெய்வத்தை வழிபட்டு, அதன் மூலம் தேசிய சர்வ தேசிய ஒருமைப்பாடு காண முயலவேண்டும்.

சிதம்பரம் இராமலிங்கம்