
ஆதரவற்ற முதியவரின் கைவண்ணம்
வள்ளலார் அறநிலையத்தால் பராமரிக்கப்பட்டு வரும் தாத்தவின் பெயர் திரு குருசாமி ஊர் மதுரை , மதுரையில் முக்கிய இடத்தில் பிரபலமாக ஒருகாலத்தில் தொழில் செய்தவர் தற்பொழுது அவருக்கு வயது 87 சிறந்த கோட்டோவியர், தொழில் நலிவின் காரணமாக உற்றார் உறாவினர்களால் கைவிடப்பட்டு தற்கொலைக்கு முயன்று தயவுத்திரு ஜோதிமுருகன் அய்யாவின் மூலம் வள்ளலார் இல்லத்தில் அனுமதிக்கபட்டு கடந்த ஐந்தாண்டுகளாக வள்ளலார் இல்ல பராமரிப்பில் உள்ளார். தற்கொலைக்கு முயன்ற சமயத்தில் இவரைப்பற்றி ஒரு பிரபல வாரப்பத்திரிக்கையில் ஒரு செய்திவெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது முக்கியப் பணி கோட்டோவியம், வெறும் பால்பாயிண்ட் பேனா, மற்றும் பென்சில்களால் நூற்றுக்கணக்கான அற்புதமான ஓவியங்கள் வரைந்துள்ளார். அதில் ஒன்றுதான் அருகில் காணப்படும் வள்ளலார் ஓவியம்.
மேலும் இவர் ஒரு சிறந்த பேனர் மேக்கர், இவர்மூலம் வள்ளலார் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற மாணவ/மாணவியர்களும் ஓவியம் பயின்று வருகின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது முக்கியப்பொழுதுபோக்கு ஓவியம் வரைதல் அதிலும் வெறும் கோடுகளாலேயே ஓவியங்கள் வரைவதில் மிகவும் திறமையானவர்.
குறிப்பு: அருகில் உள்ள இந்த ஓவியம் உணர்த்துவது எல்லாஉயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் வேண்டும் என்ற வள்ளலார் கொள்கையை வலியுறுத்துகின்றது.
vumt/rmd