Vallalar Universal Mission Trust   ramnad......
திருவருட்பா வசனபாகம் 2. பெரு விண்ணப்பம்

திருவருட்பா வசனபாகம்

2. பெரு விண்ணப்பம்

அருட்பெருஞ்ஜோதி

இயற்கையுண்மை நிறைவாகியுள்ள ஓர் சுத்த சிவனுபவ வெளியில் இயற்கை விளக்க நிறைவாகி விளங்கிய அருட்பெருஞ்ஜோதி சொரூபராய், இயற்கை யின்ப நிறைவாகியோங்கிய , சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை, எல்லா உயிர்களும் இன்பமடைதற் பொருட்டுத் திருவுளக் கருணையாற் செய்தருளுகின்ற.

சர்வ வல்லபராகிய தனித்தலைமைக் கடவுளே!

(சிற்றணுப் பசு)

அறிவென்பது ஓர் சிறிதுந்தோற்றாத அஞ்ஞான மென்னும் பெரிய பாசாந்த காரத்டில் நெடுங்காலம் சிற்றணுப்பசுவாகி அருகிக் கிடந்த அடியேனுக்குள் உள்ளொளியாகியிருந்து, அப்பா சாந்தகாரத்தி னின்றும் எடுத்து, எல்லாப் பிறப்புடம்புகளிலும் உயர்வுடைத்தாகிய ஆறறிவுள்ள இம்மனித பிறப்புடம்பில் என்னை விடுத்து சிறிது அறிவு விளங்கச் செய்த தேவரீரது பெருங்கருணைத் திறத்தை எங்ஙனம் அறிவேன்!

எல்லாம் வல்ல இயற்கை யுண்மைக் கடவுளே!

(பகுதிப் பேரணு உரு)

உபசாரத்தாற் பெற்ற தந்தையென்பான் ஒருவனது சுக்கிலத்துளியின் கண் என்னை ஓர் பகுதிப்பேரணு வுருவிற் பெருகி வெளிப்பட விருத்திய காலத்திலும் எனக்குள் உள்ளொளியாகி ன்யிருந்து அப்பகுதி பேரணி வுருவைச் சிருட்டிததருளினீர். அன்றிப் புறத்தில் யாவராலுஞ் சகிக்கப்படாத அதன் அருவருப்பையும் அசுத்தத்தையும்தீ நாற்றத்தையும் சகித்து அச் சுக்கிலத் துளியினிடத்து ஓர் ஆவியுருவாகியிருந்து அத்துளியின் கண்ணுள் பலகை விரோத தத்துவங்களாற் சிறிதுந் தடைபடாமல் என்னுருவையும் காத்தருளினீர், அன்றி,அங்ஙனம் அரும்பிய ஆன்ம சத்திக் கலைகள் வெளிப்பட விளக்கி வளர்த்தும் அருளினீர்.

உபசராத்தாற் பெற்ற தாயென்பாள் ஒருத்தியின் சோணிதத்திரளில் என்னுருவைச் சேர்க்கும் வரையில், அப்போதப்போது என்னுருவை சிதைப்பதற்கு எதிரிட்ட துரிசுகளெல்லாவற்ரையும் நிக்கிரகஞ் செய்தருளினீர் , இங்ஙனம் புரிந்த தேவரீரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை எங்ஙனமறிவேன்! எவ்வாறு கருதுவேன்! என்னென்று சொல்வேன்!

...தொடரும்