Vallalar Universal Mission Trust   ramnad......
சன்மார்க்க சங்கமும் உயிரிரக்கமும்

வள்ளலார் இரக்கத்தின் அருளின் முழுவடிவாய் இருக்கின்ற இறைவனை நமது உள்ளத்தில் அருளை வளர்த்து, செயலில் அருளைக் காட்டுவதன் மூலமாகத்தான் அடைய இயலுமென்பதை தனது பட்டறிவின் அடிப்படையில் கண்டுகொண்டார். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்று எண்ணும் சான்றோர்களின் மரபு வழி வாழையடி வாழையாக வந்த வள்ளலார் தான் கண்ட பேருண்மையை உலகிற்கு எடுத்துரைக்க ஓர் அமைப்பினை உருவாக்கத்தீர்மானித்தார்.

கொள்கை நின்று நிலவ வேண்டுமானால் அது பரவுதல் வேண்டும். ஆலமரம் விழுது விட்டுப் படர்கின்ற பொழுது அணிதேர், புரவி, படைக்கு நிழல்தருமளவிற்கு வளர்கின்றது. அதேபோல் கொள்கை என்ற குளிர் நிழல் வெம்மைசேர் உலகில் வாழ்பவர்களுக்கெலலம் கிடைக்க அதனை வழங்குகின்ற ஓர் அமைப்பு வேண்டும். அத்தகைய அமைப்பாகாத்தான் சன்மார்க்க சங்கத்தை வள்ளலார் தோற்றுவித்தார்.

வள்ளலார் தன்னுடைய கொள்கைகளை வளர்க்கவும், விளக்கவும், நின்று நிலவச்செய்யவும் மூன்று தலையாய அமைப்புகளை நிறுவினார். அவை சன்மார்க்க சங்கம்(1865) சத்திய தருமச்சால (1867), சத்திய ஞானசபை(1872) என்பனவாகும்,. அவை மூன்றிற்கும் முன்னோடியாகவும், அடிப்படையாகவும், வழிகாட்டியாகவும் என்றென்றும் உலகளாவ வளர்வதாகவும் அமைந்தது சத்திய சன்மார்க்க சங்கமாகும்.

பெயர் விளக்கம் :- வள்ளலார் 1865 இல் அமைத்த சங்கத்திற்கு முதலில் இட்ட பெயர் சமரச வேதசன்மார்க்க சங்கம்” என்பதாகும். பின்னால் அதனை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், என்று மாற்றிவிட்டார்.

.தொடரும்