Vallalar Universal Mission Trust   ramnad......
ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை/தொடர்ச்சி



இராமலிங்க அடிகளாரின் தத்துவம் சமரச சுத்த சன்மார்க்கம் ஆகும். சமரச சுத்த சன்மார்க்கத்தில் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை தலையாய கருத்து. ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமைக்கு வழி சீவகாருண்யம் ஆகும். ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை உணர்ந்தவர்கள் பிறப்பு இறப்பு வட்டத்திலிருந்து நீங்கி மரணத்தை வென்று விடலாம் என்பது இராமலிங்க அடிகளாரின் கொள்கை. சீவகாருண்யத்தை விளக்கி இராமலிங்க அடிகளார் ஆற்றிய சொற்பொழிவு அவரது அடியவர்களால் சிறிய புத்தகமாக வெளியிடப்பட்டு உள்ளது. இதில் சீவகாருண்யமே அன்பே மோட்சத்தின் திறவுகோல் என்று இராமலிங்க அடிகளார் வலியுறுத்தியுள்ளார்.

சமரச சுத்த சன்மார்க்கம் என்ற தனது தத்துவத்தை அடைவதற்கு முன்னர் அவர் பல தத்துவங்களையும் சமயங்களைவிட ஆராய்ந்து அனைத்து தத்துவங்களுக்கும், சமயங்களுக்கும் அடிப்படையில் அமைந்த உண்மைகளை உணர்ந்தார். இந்த தத்துவங்களையும் சமயங்களையும் மனிதன் கடக்கவேண்டிய படி நிலைகள் என்பதையும் மனிதன் நிலை இவைகளுக்குமேல் உயர்ந்தத்டு என்பதையும் உணர்த்தவே சுத்த’ சன்மார்க்கம் என்று பெயரிட்டார்.

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உலகு காண இராமலிங்க அடிகளார் பாடிய பாடல்கள் பலவற்றை திரு அருட்பாவின் ஆறாம் திருமுறையில் காணலாம். ஆறாம் திருமுறையி வெளியிட (அச்சிட) அவர் அனுமதிக்கவில்லை. அது சன்மார்க்கத்தை வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் தொண்டர்களுக்கு மட்டும் என மறைமுக போதனைகளாக’ அவர் வைத்திருந்தார். அது அவர் வாழ்ந்த கால சூழலின் விளைவு. அவற்றைப் புரிந்து கொள்ள முயன்றவர்களை விட கண்மூடித்தனமாக எதிர்த்தவர்கள் அதிகமாக வாழ்ந்த காலம்.

/தொடரும்