ஆருயிர்க் கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தை நின தருட்புகழை எடுத்தியம்பி இடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவமார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான் செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண்டு வனே”
என்கின்றார், தனையடுத்தால் சுகம் பெற்று இனிது வாழ வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், எவ்வுயிரும் இன்பமடைதல் வேண்டுமென்று வேண்டுகின்றார்.
“ அருளா நான் வேண்டுதல் கேட் டருள்புரிதல் வேண்டும்
அணுத்துணையும் சினங்காமல் அடையாமை வேண்டும்
மருளாய வுலகமெலாம் மருள் நீங்கி ஞான
மன்றிடத்தே வள்ளலுனை வாழ்த்தியிடல் வேண்டும்
இருளாமை யுறல்வேண்டும் எனையடுத்தா ர் சுகம் வாய்ந்
திடல்வேண்டு மெவ்வுயிரும் இன்பமடைதல் வேண்டும்
பொருளாமோர் திருவடிவிலு டையாயும் நானும்
புணர்ந்துகலந் தொன்றாஅகிப் பொருந்துதல் வேண்டுவனே
என்றும், எல்லாச் சாதி சங்கற்ப, சமய, விகற்பங்கள் எல்லாம் தவிர்த்து உயிர்கள் மாட்டு அன்பு கொள்ளவேண்டு மென்பதனை,
“ அச்சா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வெண்டும்
ஆறந்த நிலைகளெலா மறிந்தடைதல் வேண்டும்
எச்சார்புமாகி உயிர்க் கிதம்புரிதல் வேண்டும்
எனையடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்
இச்சாதி சமயவிகற்பங்கள் எல்லாம் தவிர்த்தே
எவ்வுயிரும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்.
என்ற பாடலின்கண் விளக்குகின்றார். பிறனை கடைத்தேற்றுவதற்காக நீ உன் சுவர்க்கப் பதியை இழக்கக்கூட தயாராக இருக்கவேண்டும். என்று விவேகானந்தர் பேசுவது போன்று, உயிர்க்கு இதம்புரியும் நோக்கோடு வழங்கியருள சித்தமாயிருக்க வேண்டும் என்றும் உணர்த்துகின்றது அருட்பா. திருமூலர் காலந்தொட்டு அறிவியல் வளர்ந்திருக்கிறாது என்று நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும், இந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் வரை வாழ்ந்து வந்திருக்கின்ற மனித சமுதாயத்தின் ஆன்மீக வளர்ச்சியினைப்பற்றிச் சிந்திக்கும்போதுதான், வரிசை வரிசையாக மெய்ஞானியர் பலர் வந்துங்கூட, முழுமை பெற்ற ஆன்மீக உணர்வு மனிதர்களிடை இன்னும் தோன்றியதில்லை. என்பதனை உணர்ந்து வருந்தவேண்டியதுள்ளது..
…தொடரும்