Vallalar Universal Mission Trust   ramnad......
கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருள் எந்தவண்ணம் உடையது? என்றறிய வேண்டில்

கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருள் எந்தவண்ணம் உடையது?

என்றறிய வேண்டில்

சொல்லுவார் சொல்லும் வண்ணங்களும், நினைப்பார் நினைக்கும் வண்ணங்களும், அறிவார் அறியும் வண்ணங்களூம், அனுபவிப்பார் அனுபவிக்கும் வண்ணங்களும், ஆக்ய சர்வ சக்தி வண்ணங்களும் தனது ஏகதேச வண்ணங்களாக விளங்க விளக்கி விளங்குகின்ற பூரண விளக்க வண்ணத்துடையது என்றுஅறியவேண்டும்.

வள்ளலார்.

ஜீவர்கள் முன் தேகத்தில் செய்த பாப கர்மங்கள் இந்தத் தேகத்திலும் வரும் என்பது எப்படி எனில்

ஒரு சமுசாரி முன் குடித்தனஞ் செய்திருந்த வீட்டில் தன் தலைவன் கட்டளைப்படி நடவாமல் துன்மார்க்கர்களை வருவித்து அவர்களோடு கூடிப் பழகிருந்தானானால், அந்த சமுசாரி அந்த வீட்டை விட்டு வேறொரு வீட்டில் குடிவந்த காலத்திலும், அந்தந்த துன்மார்க்கர்கள் இந்த வீட்டிலும் வந்து அவனுடன் பழக்கஞ் செய்வார்கள். அதுபோல் ஒரு ஜீவன் முன் குடியிருந்த தேகத்தில் கடவுள் கட்டளைப்படி நடவாமல் துன்மார்க்கத்தால் பாப கர்மங்களை விரும்பிச் செய்து இருந்தானானால் அந்த ஜீவன் வேறொரு தேகத்தில் வந்த போதும் அந்த பாப கர்மங்கள் இப்போது வந்த தேகத்திலும் அந்த ஜீவனைச் சேருமென்று அறியவேண்டும்.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய

விவேகவிருத்தி மாத இதழ்04/-