Vallalar Universal Mission Trust   ramnad......
எவ்வுயிரும் தம்முயிர்… தொடர்ச்சி….;

மனிதனை மனிதன் மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்ற மானிடப் பண்பே பொருள் இழந்து போன காலம் இது. செம்புக்கும், கொம்புக்கும், அஞ்சி மனிதன் சிற்றடிமைப்பட்ட காலமென்னும் காட்டாற்றைக் கடந்து வந்துங்கூட, மனிதன் முழுமன வளர்ச்சி உடையவனாக தன்னை மாற்றிக்கொள்ளூம் முயற்சியில் ஈடுபட்டதில்லை. வானில் பறக்கும் பறாவையினைப் பார்த்து, தானும் சிறகுகளை எங்கேஉம் கட்டாயாமாகக் கடன் வாங்கிக் கொண்டு, வானத்தின் வரை தழுவிச் செல்ல வழியிருக்கிறதான் என்று தன்னையே குழப்பிக்கொண்டான். இன்று கணக்கற்ற வானவூர்திகளில் பவனிவருகின்றான். நீரிலும் மீனைப்போலச் சுற்றித் திரிய வழிகண்டுபிடித்துவிட்ட இறுமாப்பில் திளைக்கிறான். ஆனால் பூமியில் மனிதன் மனிதனாக நடந்துகொள்ள ஒருநாளும் முயன்றதில்லை. மனிதனுக்குரிய உயர் பண்புகளுடன் , உலகில் வாழ்வதும், ஆறறிவு பெறாப்பிராணிகள் தாவரங்கள் மீதும் கருணை உடையவனாக விளங்க வேண்டியதும் அவன் கடமை என்று அருட்பா பேசுகின்றது. அயராது உழைக்கின்ற உடலுக்கு மனிதன் உண்ணும் உணவின் சத்து ஊட்டமாக அமைவது பொன்று, நற்பண்புகளை செயல்படுத்தும் உள்ளத்திற்கு , கலப்பில்லா அன்பு ஊட்டமாக அமையும், அத்தகைய அன்பினால், செய்ய இயலாதென்று ஒன்று இல்லை அன்புப்பிழம்பாகிய இறைவனைக் கூட அந்தப் பிடிக்குள் அடக்கிவிடலாம்

அன்பெனும் பிடிக்குள் அடங்கிடும் கடலே,

என்கிறார் திரு அருட்பிரகாச வள்ளலார்.

தொடரும்…….