திருக்குறுந்தொகையில்
மனிதர்காள்! இங்மேவம்! ஒன்று சொல்லுகேன்!
கனிதந்தாற் கனி உண்ணவும் வல்லீரே
புனிதன் பொற்கழல் ஈசன் எனும்கனி
இனிது சாலவும் ஏசற்றவர்கட்கே
என்று பாடிச்சென்றார். அவர் கூறிய ஈசன் எனும் கனி வள்ளலாரிடம் புதுமையும் பொலிவும் பெறுகின்றது. கோடையிலே இளைப்பாற்றி கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருவாய், தருநிழலாய்; நிழல் கவிஅந்த கனியாய்க் காணும் வள்ளலார் இவ்வுகருகத்தைத் தம் பாடல்களில் பல இடங்களில் அழகுறப் பயன்படுத்தியுள்ளார். மகாதேவ மாலையில் இதனை முற்றுருவமாக்கிஅவர் மகிழ்கின்றார்.
பேதம் உறா மெய்ப்போத வடிவாமாகிப்
பெருங்கருணை நிறம்பழுத்துச் சாந்தம் பொங்கிச்
சீதமிகுந்து அருள்கனிந்து கனிந்துமாறாஅச் சின்மயமாய்
நின்மமலே மணந்து நீங்கா
ஆதரவோடு இயன்மவுனச் சுவைமேன்மேற் கொண்டு
ஆனந்தரசமொழுக்கி அன்பால் என்றுஞ்
சேதமுறாது அறிஞருளம் தித்தித்துஓங்கும்
செழும் னிதக் கொழுங்கனியே தேவ தேவே (மகா..,44)
அருள்கனிந்து கனிந்து – அன்பால் என்றும் சேதமுறாது திகழும் கனி என இறைவனை ஏத்தும் இயல்பு நோக்கத்தக்கது. வள்ளலார் இறைவனை அருள் உருவாகக் காண்பதையே சோதிப் படிமமும் கனியுருவகமும் காட்டுகின்றன.
அவரது திருவடிப்புகழ்ச்சியும் மகாதேவமாலையும் கற்று உணரத்தக்கன. இதுவரை தமிழ்ப்பத்திமை இலக்கியம் போற்றிவந்துள்ள இறையுண்மைகளைப் புதிய கண்னோட்டத்துடன் விளக்கும் திறம் வியக்கற்பாலது. இறைவனைத் தத்துவப் பார்வையிலும் விளக்குகின்றார். இலக்கிய நயத்தோடும் எடுத்துக்காட்டுகிறார். முன்னையோர் போலத் தாயாகப் பாவித்தும் பாடுகின்றார். கணவணாகக் கொண்டும் பல இடங்களில் கருத்தொன்றிய காதலை வெளிப்படுத்துகிறார்.
அவர் காட்டும் இறைவன் வேதாந்த நிலையாகிச் சித்தாந்தத்தின் மெய்யாகிப் பின் அவற்றையும் கட்ந்து சமரசத்தின் விவேகமாகத் திகழ்பவன்.
தொடரும்…