Vallalar Universal Mission Trust   ramnad......
வள்ளலாரும் சமுதாயச்சிக்கல்களும்…../

சாதிகளற்ற சமுதாயம் உருவாக்க சமுதாயச் சீர்திருத்தம் செய்ய வழி கூறியுள்ளார். அதன் நோக்கம், மனிதன் உயர் மனம் படைப்பது என்பதே ஆகும். அந்த உயர் மனம் யாது? ஆன்ம நேயம் கொள்வதே ஆகும், அந்த நேயம், அவனது இயற்கைப் பண்பாம் அன்பின் விளக்கம்; விரிவு; மலர்ச்சி; பெருக்கம்; இறைவன் தந்த அந்த இயல்பு வளரவேண்டும். மனிதனாய் போட்டுக் கொண்ட சதி சமய எல்லைக் கோடுகள் தடையாகி அந்த இயல்பை வளர விடாது தடுத்துவருகையில், இறைவனை அறிவது எவ்வாறு? ஆதலாம் இயற்கைப் பண்பிற்குச் செயல் வடிவம் கொடுத்துச் சீவகாருணிய சேவை செய்வதே இறைவனை அறிய உணர ஒரே வழி ஆகும் என்றார் வள்ளலார். சாதி வேறுபாடு கருதும் திசை விலகினால் தான் சமுதாயத்தில் பரவியிருக்கும் பொல்லா வறுமையுடன் போராட்டம் தொடுக்க முடியும். சாதிச் சங்கம் சாதி வறுமையை நீக்கும் சமுதாய வறுமையை நீக்காது. சாதி பொய் சமுதாயம் உண்மை. சாதியில் தடைசெய்யப்படாத, கருணை வேண்டும். எங்கே கருணை இயற்கையின் உள்ளன அங்கே என்றருள் அருட்பெருஞ்ஜோதி. என்று வள்ளலார், தடையற்ற கருணையின் பெருக்கிற்கு எல்லோர்க்கும் துன்பம் துடைக்க ஓடும் செயலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார். வறுமையற்ற சமுதாயத்தை நோயற்ற சமுதாயத்தை உருவாக்க மனிதர்கள் உழைக்க வேண்டும். அதுவே இன்று தேவை யான இறைநெறி. அதையே சுத்த சன்மார்க்கத்தின் முக்கியமான படி என்று வகுத்தார் வள்ளலார். இச்சேவையில் விளைகனியாகக்கிடைப்பதி ஆன்மநேயம், நேயத்தால் விளைவது ஒருமைப்பாடு? இது நாடுகளிடையே வந்தால் உலகப் போர்கல் நிகழா,அணு ஆயுதங்கள் வளரா. வணிகச் சந்தைக்குப் போட்டிகள் வரமாட்டா.

திரு சுப அண்ணாமலை