வள்ளலார் கண்ட சமுதாயம்(பழைய சமுதாயம்)காண விரும்பிய (புதிய )சமுதாயம்
திரு சுப-அண்ணாமலை
சமயங்கள் வெற்றுச் சடங்காய் போன நிலை அவர்கண்ட சமுதாயத்தில் இருந்தது. சாதி வளர்ப்பவரின் கைப்பாவையாக அவரால் பாதுகாக்கப்பட்ட சாதி வேறுபாடுகளுக்கு அரண் செய்யும் பொம்மைக் கொள்கையாகச் சமயம் இருந்தது சதி உயர்வு தாழ்வுகள் தலை விரித்தாடின. சாதிச் சண்டைகளும் தீண்டாமையும் பெருகிய அளவில் இருந்தன. சாதிக்குள்ளும் கோத்திர, குல பிரிவுகள் மக்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்தின. இவற்றால் அலைவுதான் இருந்ததே தவிர வாழ்க்கை இல்லை. ஒற்றுமை இல்லை. நேசபாவம் இல்லை. ஆதலின் முன்னேற்றம் இல்லை. மாறாகக் கலகமும் சண்டையும், பகைமையும், காழ்ப்பும் வளர்ந்தன. சமயமோ இதைத்தடுக்க வழியின்றி வெறும் சடங்குக்குள் சிறைப்பட்டு, தத்துவ வாதங்களூக்குள் முடங்கி, சாதி வெறியாளர்களுக்குப் பின்பாட்டுப் பாடிக் கொண்டிருந்தது. வெறும் சடங்கு மூட்டையாகவும் தத்துவ வாதக்குப்பையாகவும் இருக்கும் வரை சமயம் மக்களுக்குப் பயன்படாது என்பதை வள்ளலார் உணர்ந்தார். சமயம் வாழ்க்கை நெறியாக , செயல் நெறியாக, செயலூக்கமாக இருக்க வேண்டும் (Religion should be a living force and force for living) என்பதை உணர்ந்தார். சமயம் சடங்கு செய்யும் அல்லது செய்விக்கும் குருக்களின் அல்லது பூசாரியின் சொந்தச் சொத்தல்ல. சடங்கைச் செய்துவிட்டு, சமயத்தின் கடமை முடிந்துவிட்டது என்று எண்ணி, விருப்பம் போல் வாழ்வது குருட்டுத்தன்மை. படித்தவர் நிலையில் ஏதோ தத்துவ வாதங்களைச் சாத்திரப் பிடிப்பின் அழுத்தத்தோடு செய்துவிட்டால், ஆன்மாவின் தேவை முடிந்துவிட்டது என்று எண்ணி, தத்துவத்தின் நிழல் ஒன்று கூடப் படியாமல் விருப்பம் போல் வாழ்வதும் குருட்டுத் தனம். இவ்விரண்டாலும் பொருள் முதல் வாதந்தான் (materialism) வளருமே அன்றி, உயிர்முதல் வாதம் (spiritualism) தன்மை அடையாது, வளராது. சமயம் என்ற சிறிய அளவுக்கு உள்ளே அடைப்பட்டிருக்கும் இறைநெறி, தத்துவம் என்ற இருட்டறைக்குள்ளே முடங்கிக் கிடக்கும் இறைநெறி – அப்பெயருக்கே தகுதியில்லாததாய்ப் போய்விட்டது. அது மக்களுக்கு , வாழ்க்கை நெறியாக வரவேண்டும் வந்தால் பேயாட்டம் ஆடுகின்ற சாதி, சமய , இன , குல, கோத்திர வேறுபாடுகள் மறையும் என்றா நோக்குடன் (perspective)வள்ளலார் அக்காலச் சமுதாயத்தைச் சந்தித்தார்.
Contd…..
When do we have a dawn....following the principles of Vallalar Swami. ?
Waiting for that.