பேரூபதேசம்…..
முயற்சியில்லாத சாதாராண மனுஷ்யர்களுடிஅய கீழ்பாகத்திலிருக்கிற அசுத்தாமாயை யென்னும் பச்சைத்திரையை மாத்திரம் நீக்குவார். அக்காலத்தில் நாம் அத்திரை நீங்கியவுடன் கூடிய வரையில் சுத்தமாய், புனிதர்களாக இருக்கலாமே அல்லது பெறவேண்டியதைப் பெற்றுக் கொள்ளுகிறதற்குக் கூடாது- மேலும் –பஞ்சகிருத்திய விபரங்களும் இதர சித்தி முதலியவையும் ஆன்மானுபத்தையும் செய்யவும் பெறவும் கூடாது.
ஆண்டவர் வருகின்றபோது
ஆதலால் நாம் எல்லோரும் இத்தருணம் இப்போதே விசேஷ நன்முயற்சியுடனிருந்தால் நம் கீழ்ப்பாகத்தில் உள்ள அசுத்தமாயா திரையோடு கூடி, மேற்பாகத்திலிருக்கிற சுத்தமாயையினுடைய பச்சைத்திரையும் நீங்கிப் போய்விடும்.
அசுத்தமாயாதிரை சுத்தமாயாதிரை
கருமையிற்பச்சை வண்ணமுடையது, பொன்மையிற் பச்சை வண்ணமுடையது.
கருமையிற்பச்சை வண்ணமுடைய அசுத்த மாயாதிரை நீங்கின பிறகு மற்ற எட்டுத்திரைகளும் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும்.
மேலும் இது நீங்கின உடனே ஒருவன் பஞ்சகிருத்திய முதலானவையுஞ் செய்வான்.
ஆதலால் ஒவ்வொருவரும் முயற்சியுடனே இருந்தால் அதற்குத் தக்க லாபத்தை பெற்றுக்கொள்ளலாம்.
தொடரும்….