Vallalar Universal Mission Trust   ramnad......
உபதேசங்கள்

இறந்தவர்கள் திரும்பவும் எழுந்து திரும்ப நம்முடன் இருக்கப் பார்ப்போமென்கிற முழு நம்பிக்கையைக் கொண்டு எவ்வளவுத் துயரப்படாமலும் அழுகுரல் செய்யாமலும் சிற்றம்பலக் கடவுள் சிந்தையுடனிருக்க வேண்டும்.

எப்போதும் மன உற்சாகத்தோடிருக்க வேண்டும்.

எப்போதும் சலிப்பில்லாமல் சுத்தக் காரணமாய் அருள்வடிவாய்த் தானாக நிற்றலே சாகாக் கல்விக்கு ஏது.

ஆரம்பத்த்டில் செய்வதற்கும் அனுபவித்ததற்கும் முயற்சிப்பதற்கும் துக்கமாயும் பின் சுகமாயும் விளங்குவது புண்ணியம்.

ஆரம்பத்தில் சுகமாயும் பின் துக்கமாயும் இருப்பது பாவம்.

உலகியற்கண் பொன் விச்ய இச்சை மண் விஷய இச்சை முதலிய எவ்விஷய இச்சைகளிலும் நமது அறிவை ஓர் அணுத்துணையும் பற்றுவிக்காமல் பொதுப்பட நல்லறிவு, கடவுள் பக்தி, உயிரிரக்கம், பொதுநோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஒழுக்கங்களில் நின்று உண்மையுரைத்தல், இன்சொல்லாடல், உயிர்க்குபகரித்தல் முதலியவாகக் குறித்த நற்செய்கைகளைக் கொள்க.

ஒரு வஸ்துவினிடத்தில் பற்றுதல் அவர் அதை அனுபவிக்கவேண்டு

மென எழுந்தது ஆசை, அதன் மயமாதல் காமம், அதைத் தன் வசப்படுத்த எழுவது மோகம், எந்த வஸ்துவினிடத்திலும் மோகமாதிகளின்றி அவாமயமாய் நிற்றல் வேண்டும்.

சடமும் துக்கமும் அநித்யமுமாகிய உலகபோகத்தை விரும்புகின்ற மற்றவர்களைப் போல் மயங்குதல் வேண்டாம்.

வரவுக்கு தக்க செலவு செய்ய வேண்டும். இனி விசேடமான அலுவல் நேரிடுகிற பரியந்தம் இப்பொழுது நேரிட்டிருக்கிற அலுவலைப் பார்த்து வர வேண்டும்,

பழமை பாராட்டலும், கண்ணோட்டம் செய்தலும், சுற்றந்தழுவலும் அவசியம் சமுசாரிக்கு வேண்டும்.