தயவு
திருவருட்பிரகாச வள்ளலார் அருட்கொடைகள் ஐந்து
1) சன்மார்க்க சங்கம்
2) சத்திய தருமச்சாலை
3) சத்திய ஞானசபை
4) சித்திவளாகம்
5) திருஅருட்பா
சங்கத்தின் குறிக்கோள் .. ஆன்மநேய ஒருமைப்பாடு
சாலையில் குறிக்கோள் .. ஜீவகாருண்ய ஒழுக்கம்
சபையின் குறிக்கோள் .. ஜோதி தரிசனம்
சித்திவளாகத்தின் குறிக்கோள் .. மரணமிலாப்பெருவாழ்வு
திருவருட்பாவின் குறிக்கோள் .. மேற்கூறிய நான்குமே
முதல் நான்கும் நிறுவனங்கள்
ஐந்தாவது நூல்
முதல் நான்கும் கற்கோயில்கள்
ஐந்தாவது சொற்கோயில்
கற்கோயில் கட்டினார் – சொற்கோயில் கட்டினாரில்லை
சொற்கோயில் கட்டினார் – கற்கோயில் கட்டினாரில்லை.
வள்ளற்பெருமான் – கற்கோயில் சொற்கோயில் ஆகிய இரண்டையுமே
இயற்றியுள்ளார்.
பூசம்
பூசம் என்பது அண்டவானில் கடக நடுவில் உள்ள ஒரு நட்சத்திரம்.
பூசம் : இது காற்குளம் ( கால் + குளம்)
எனப்படும்
நம்மில் கடம் என்பது உடல் , கம் – தலை, இதன் நடுவே, பகர வடிவக் குளத்தில் திகழுகின்ற அருட்ஜோதித் திருவடியே காற்குளமாம் பூசம் அதில் நிலைத்து நின்று ஒளிவீசுவது அருட்பெருஞ்ஜோதி அருள் அனுபவ நிலை
அது பிரணவ தேகத்தை குறிக்கின்றது.
முழு நிலவு ஞான தேகத்தையும் உதய ஞாயிறு சுத்த தேகத்தையும் காட்டுகிறது.
இதுவே ஒரு சன்மார்க்கி பெற வேண்டிய முத்தேக சித்தி நிலை ஆகும்.
தைப்பூச நாளில் விடியற்காலையில் வானத்தில் மேற்குபகுதியில் முழு மதி
கிழக்கு பகுதியில் உதய ஞாயிறு
ஞானசபை நடுவில் அருட்பெருஞ்ஜோதி