Vallalar Universal Mission Trust   ramnad......
உபதேசங்கள்

பெண்களுக்கு யோகம் முதலிய சாதனங்கள் அவசியம் கற்பிக்க வேண்டியது. மேலும் பேதமற்று அபேதமாய்ப் படிப்பு முதலியவையும் சொல்லிக் கொடுக்கவேண்டியது.
நல்லாரெனத் தான் நனி விரும்பிக்கொண்டாரை அல்லாரெனினும் அடக்கிக் கொளல் வேண்டும்.
செல்லும்போது செலுத்துவேன் சிந்தையை, வெல்லும்போது விடுவேன் வெகுளியை(கூடுவெளி சித்தர்)
வாக்கினால் சமீபித்தும் மனத்தினால் நெடுந்தூரமாகியும் இருக்கவேண்டும். (தகுதியற்றவரிடத்தில்)
உலகியற்கண் ஒழுகுங்கால் கழிநடை (வேகநடை) யொருவன் கட்பார்வை(பட்டும் படாமல் மேலோட்டமான பார்வை) போன்றொழுகல் வெண்டும்.
என்னிடத்தில் ஒருவன் வசப்படாத முரட்டுத் தனமாய் எப்படியிருந்தாலும்.1. அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன், 2, மிரட்டிச்சொல்லுவேன், 3. தெண்டன் விழுந்து சொல்லுவேன். 4. அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன். 5.அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன். இப்படி எந்த விதத்திலேயாவது நல்ல வழிக்கு வரச் செய்து விடுவேன். நீங்கள் எல்லவரும் இப்படியே செய்தல் வேண்டும்.
இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெரு மறைப்பையும் போது போக்கையும் உண்டு பண்ணுகின்றவை ஆரிய முதலான பாஷைகள்.
பயிலுவதற்கு அறிவதற்கும் மிகவும் இலேசுடையதாய் பாடுவதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமையானதான சாகக்கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தால் கிடைத்தது தென் மொழியான தமிழ் மொழி.
தயவு