Vallalar Universal Mission Trust   ramnad......
உறுதி கூறல்

கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோ மென்பீர
கண்ணோடே கருத்தோடே கருத்தளைக் கருதீர்
பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில்
பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர்
கொட்டோடே முழக்கோடே கோலங்காண் கின்றீர்
குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர்
எட்டோடே இரண்டுசேர்த் தெண்ணவும் அறியீர்
எத்துணை கொள்கின்றீர் பித்துலகீரே.
இதில், நல்லறிவில்லாத உலக மக்களே! நீங்கள்,நான்
ஊருக்குப் பெரியமனிதன், நாட்டாண்மைக்காரன் என்று பெருமை பேசிக்கொள்கிறீர்கள், பட்டாடையுடுத்திக் கொண்டு, காதில் கடுக்கண், விரல்களில் மோதிரம், கழுத்தில் பொற்சங்கிலியணிந்து கொண்டு ஊர் சுற்றுகிறீர்கள், வீட்டில் நடக்கும் சிறு செயலுக்குக் கூட மேள வாத்தியம், கொட்டி, முழக்குகின்றீர்கள், கண்ணும் கருத்தும் உள்ள போதே இறைவனை நினைப்பதில்லை. பசியென்று வருகிறவருடைய முகத்தைப் பார்ப்பதே கிடையாது. எட்டையும் இரண்டையும் சேர்த்து எண்ணத்தெரியாது. அதாவது ஓமென்று நினைப்பதில்லை. யகரமாகிய ஆன்மாவை அறிவதில்லை சாகும் போது எந்தத் துணையை நம்பியிருக்கின்றீர்கள் என்கிறார் வள்ளலார்.