புலால் உண்பவர்கள் மூன்று மிகப் பெரிய குற்றங்களைச் செய்தவர்கள் ஆவார்கள் அவைகள்
1. தம் உடம்பிலுள்ள கடவுள் விளக்கத்தை மாசு படுத்தி விடுகின்றனர். அதாவது தன் உள்ளத்தை இருளாக்கிக் கொள்கின்றனர்.
2. கொல்லப்படுகின்ற ஜீவனில் உள்ள கடவுள் விளக்கத்தை அழித்துவிடுகின்றனர். அதாவது மனிதன் மனித நிலையிலிருந்து விலங்கு நிலைக்கு இறங்கி விடுகின்றான்?
3. இறைவனின் பெருந்தன்மையுள்ள, பெருங்கருணை உள்ள பெரு நோக்கத்துக்கு எதிரக செயல்படுகின்றனர்.
மாமன்னர்களின் பொன்மொழிகள்
எல்லா உயிரையும் காப்பாற்றக் கூடியது எதுவோ அதுவே தர்மம்
(அசோக சக்கரவர்த்தி)
புலால் உண்ணும் வயிறு பிணம் புதைக்கும் இடுகாடு
(மாமன்னர் அக்பர்)
7 Comments
நமக்கு பிடித்த பெரியவர்கள் சைவ உணவு உண்ண வேண்டும்,அசைவ உணவுசாப்பிட கூடாது என சொன்னால் தான் அதை கடை பிடிக்க வேண்டும் என நினைப்பது எப்படி பொருந்தும்.நீங்கள் நன்மை செய்தால் அது பெரியவர்கள் செய்ய சொல்லி இருகிறார்களா என பார்த்து தான் செய்வீர்களா?சுய சிந்தனை நன்மை செய்ய சொல்லாதா? சொல்லுங்கள்.உங்களிடமும் கருணை ,அன்பு இருக்கிறது.அதனை கண்டு இயல்பாக உள்ள உங்கள் கருணையை,அன்பை விளக்கம் பெற செய்யுங்கள்.
பெரியவர்களின் கருத்துகளை உணர்ந்து படித்து பாருங்கள்.உண்மை தெளிவாகும்.by,AruljothiSujatha.
வள்ளலாரின் "ஜீவ கர்ருணிய ஒழுக்கம்" புத்தகம் கிடைத்தால் அதை முதலில் படித்து
உணர்ந்து அதன் பின் கடை பிடிக்க முயலுங்கள்.அமைதி உங்களுக்கு கிடைக்கும்.
சைவ உணவை உண்டு பல காலங்கள் நலமாக வாழும் மனிதர்கள் நம்மில் இருக்கிறார்கள்.
தினமும்பசும் பால் ஒருடம்ளர் அருந்தினாலே போதும், வைட்டமின் பி12ஐ சமன் செய்து கொள்ளலாம். மேலும் சீஸ், பட்டர் இவைகளிலும் பி12 உள்ளது.
தயா......
ஆயுர்வேதம், உண்ணும் உணவில் தோஷம் சேரக் கூடாது என்று நான்கு தோஷங்களை கூறுகிறது. 1.கால தோஷம்: சமைத்த உணவை உஷ்ணம் போவதற்கு முன் பரிமார வேண்டும்; ஆறிய உணவில் அசுத்தம் சேரலாம் என்பதால்; 2.ராச தோஷம்: ருசியில்லா உணவு விரும்பப் படாததால் உண்டாலும் பயன் தராது என்பதால்; 3.சம்சார்க்க தோஷம்: உணவு சமைப்பவர், பரிமாறுபவர், சாப்பிடுபவர் என்று அனைவரின் கைகளும் சுத்தமாக இருக்க வேண்டும்; உணவைத் தொடுவதால். 4. பாவ தோஷம்: உணவைக்கொடுப்பவர் முகமலர்ச்சியுடன் பரிமாற வேண்டும். இதை மிக முக்கியமானதாக வள்ளுவரும் "மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து" என்று கூறியுள்ளார். மருந்து என்ற ஒரு அதிகாரம் உண்வே மருந்து என்பதற்காக; உணவே உடம்பு; அன்னமாய கோஷா. அதைப் போற்றிக் காப்பதாலேயே உள்ளே இருக்கும் உண்மைப் பரம்பொருளை தெரிந்து கொள்ள முடியும். "உடம்புக்குள்ளே உருபொருள் கண்டேன்..." கண்டது திருமூலர். நாமும் காண வேண்டாமா? புலால் உணவு நான்கு விதமான தோஷங்களையும் சேர்க்கும். வள்ளலார் பார்வைக்குள் வந்தவர்கள் புலால் உண்பதை தவிர்த்தார்கள் என்று படித்திருக்கிறேன். அன்பன் பரதன்.
Methodist என்ற பிரிவினரும் அசைவம் சாப்பிடுவதில்லை.
நீ ஜீவ வதையை ஒருபோதும் செய்யாதே - St.Mathew5,21
ஜீவனை கொல்லாதே - St.Luke 18:20
எனது அன்பனே உன்னை நான் வேண்டி கேட்டு கொள்கிறேன் தயவு செய்து மாமிசம் உண்ணாதே அது உன்னுடைய ஆத்மாவை அலைக்கழிக்கும்.- St.Peter 2: 11
From "Hamsathin agaram" a book by Radhasoami Satsang,Beas,Punjab
அன்புடன்
சுகுமார் ஸ்ரீனிவாசன்