Vallalar Universal Mission Trust   ramnad......
தாவரங்கள் (Plants)

தாவரங்கள் (Plants)
4.1.
தாவரங்களுக்கு உயிர் உண்டா?
தாவரங்களுக்கு உயிர் உண்டு.
Do Vegetations have life?
Yes, Vegetationns have life.
4.2.
தாவரங்களின் உடம்பில் ஜீவ விளக்கம் எப்படி விளங்குகிறது?
தாவரங்களின் உடம்பில் ஜீவ விளக்கம் ஒருசார் விளங்குகிறது.
How does life’s manifestation shine in the bodies of vegetation?
In the bodies of Vegetation, life’s manifestation shines only partially.
4.3.
தாவரங்களின் உயிருள்ள முதல்களை ஆகாரமாகக் கொள்ளலாமா?
தாவரங்களின் உயிருள்ள முதல்களை ஆகாரமாகக் கொள்ளக் கூடாது.
Can the main part of the vegetations with life be taken as food?
No, the main vital part of the vegetations with the life, should not be taken as food.
4.4.
வித்துக்களிடத்து ஆன்மாக்கள் ஏறுவது எப்படி?
நிலத்திற் கலந்த வித்திற்கு நீர் விடில் – அந்த நீரின் வழியாகக் கடவுள் அருள் நியதிப்படி, ஆன்மாக்கள் அணுக்கத்தேகத்தோடு கூடி, நிலத்திற் சென்று அந்நிலத்தின் பக்குவ சத்தியோடு கலந்து வித்துக்களினிடமாகச் செல்கின்றன என்று அறிய வேண்டும்.
How do souls get into the seeds?
If the seeds are sown in the soil and watered the souls, according to the Omnigracious law of God, through that water get into the soil, with their micro atomic-sized bodies, mingle with the processing of the soil and get into the seeds.
4.5.
முளைகளைப் பிடுங்கக் கூடாது – என்பதற்குக் காரணம் என்ன?
வித்து நிலத்திற் படிந்த பின் நீர் வழியாக ஆன்மாவானது சென்று பக்குவ சத்தியிற் கலந்து வித்திலேறி முளைத்தபடியால், முளையானது – வித்து, காய் முதலியவைகளைப் போல் சடம் அல்ல. ஆகலில் முளைகளைப் பிடுங்கக் கூடாது என்பது உண்மை – என்று அறிய வேண்டும்.
What is the reason for the saying that the sprouts should not be plucked out?
After the seed settles into the soil mingles with the water and gets into the soil, then it mixes with the processing energy of the soil and enters into the seed, when it sprouts. Therefore sprouts are not inert matter, like seeds, vegetables etc., So it should be understood that they should not be plucked out.
hariharan_82
பல சன்மார்க்க அன்பர்கள் இது போன்று கேள்விகள் கேட்டு தெளிவு வேண்டுகின்றனர்.
இந்த விளக்கம், வள்ளலார் சுவாமிகளின் அருமையான விளக்கம்.
Monday, December 21, 2009 at 04:16 am by hariharan_82