உபதேசங்கள்
சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கியத் தடைகளாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றைக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவர்களூம், கொலை புலை தவிர்த்தவர்களூம் ஆகிய இவர்கள்தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்.
எல்லா உயிர்களும் சிற்சக்தியின் உருவமாகலானும், எல்லா உயிர்களூக்கும் இறைவனே தனு கரணங்களைக் கொடுத்தலானும், அவனது சிற்சக்தியாகிய உயிர்களை அவன் கொடுத்தருளிய உடம்பினின்று நீக்குதல் நினைக்கப்படாத அபராதமாகும்.
நாம் வேண்டு (விரும்பி) ஓர் உயிரை பிறப்பிப்பதற்குச் சுதந்திரமில்லாத படியால் நாம் வேண்டி ஓர் உயிரை இறப்பிப்பதற்கும் சுதந்தரமில்லை. அதற்குச் சுதந்தரமுடையவர் ஆண்டவர் ஒருவரே ஆவார்.
அப்படி இறப்பிப்பதற்கும், பிறப்பிப்பதற்கும் இறைவனே சுதந்தரமுள்ளவனென்று எண்ணாமல் ஆகாமியத்தால் (ஆகாமியம்-இப்பிறப்பில் செய்யும் பாவச் செயல்கள்) கொலை செய்வதனால் மீளாநரகம் நேரிடும்.
பல வகைப்பட்ட சமய பேதங்களூம், சாத்திர பேதங்களும் , ஜாதி பேதங்களும், ஆசார பேதங்களூம் போய், சுத்த சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம் விளங்கும். அது கடவுள் சம்மதம் ( கலி 5000க்கு மேல்)
சைவம், வைணவம், சமணம், பவுத்தம் முதலாகப் பல பெயர் கொண்டுபலபட விரிந்த அளவிறந்த சமயங்களூம் அச்சமயங்களிற் குறித்த சாதனங்களூம் தெய்வங்களூம் கதிகளூம் தத்துவசித்தி விகற்பங்கள்
தயவு
Write a comment