மரணமிலாப் பெருவாழ்வு – திரு அருட்பா
5576-5603 = 28 பாடல்களின் கருத்துப் பிழிவு
1. நாம் அடையும் பேறுகள்
1.1. எவ் உலகும் ஏத்திட வாழ்ந்திடலாம்
1.2. திரைந்து திரைந்து உளுத்தவரும் இளமை அடைந்திடலாம்.
1.3. பிணி, மூப்பு, மரணம் சேராமல் தவிர்த்திடலாம்.
1.4. மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம்.
2. சாதனங்கள்
2.1. சிற்றம்பலத்து அப்பன் அருள் பெற ஆசைப்பட வேண்டும்.
2.2. தாயாக, தந்தையாக, நண்பனாக, சற்குருவாக, உயிர்த் துணையாக,
நாயகனாக – நினைந்து, உணர்ந்து, நெகிழ்ந்து, அன்பை நிறைக்க
வேண்டும்.
2.3. பற்றிய பற்று அனைத்தையும் பற்று அற விட்டு அருள் அம்பலப்
பற்றே பற்றிட வேண்டும்.
2.4. மெய்ந் நெறியைக் கடைப் பிடிக்க வேண்டும்.
3. உலக மக்களுக்கு எச்சரிக்கை
3.1. உகுந் தருணம் உற்றவரும், பெற்றவரும், உடைமைகளும்,
உலகியலும் உற்ற துணை அன்றே!
3.2. மற்று அறிவோம் எனச் சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால் மரணம்
எனும் பெரும்பாவி வந்திடுமே!
4. இறைவன் வருதருணம்
4.1. அருட்சோதி வள்ளல் பெருநெறியில் சித்தாடத் திரு உள்ளம்
கொண்டருளிப் பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே!
4.2. சத்திய வாழ்வளிக்க கருணை நிதியாகிய அருட்சோதிக் கடவுள்
வருதருணம் இது!
5. உண்மை உரை
5.1. உலகீர்! என்னை அறியீரோ? முத்தர் எல்லாம் போற்றும் அருட்
சித்தர் மகன் நானே!
5.2. ஒளித்துரைக்கின்றேன் அலன் – நான் வாய்ப்பறை ஆர்க்கின்றேன்.
5.3. நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன்றன் வார்த்தை
நம்புமினோ நம்மவர்களே!
5.4. புனைந்து உரையேன்!
5.5. பொய் புகலேன்!
5.6. சத்தியம்சொல்கின்றேன்
என்றும் அன்புடன்
கார்த்திகேயன்