Vallalar Universal Mission Trust   ramnad......
இறந்த காலம் என்பது யாது?

இறந்த காலம் என்பது யாது?
சித்தி வளாகத் திருமாளிகையில் வள்ளலார் சொற்பெருக்காற்றிக் கொண்டிருக்கும் போது நூறு அவதானம் வல்ல அய்யங்கார் ஒருவர் அங்கு வந்தார். வள்ளல் உரையில் மயங்கிக் கிடந்த சபையினர் அவரைக் கவனிக்கவில்லை. சிறிது நின்றிருந்து விட்டு, சபையோரை நோக்கி, வித்தையிலும் ஞானத்திலும் சுவாமிக்குள்ளது போலவே சபைக்கும் உள்ளது போலும், என்றார். சபையினர் சற்று நெருங்கி அவருக்கு இடந்தந்து அமரச் செய்தனர். சொற் பொழிவு முடிந்ததும் அய்யங்கார் பெருமான் முன் வந்து வணங்கினார்.
இடந் தந்ததோ என்றார் பெருமான் அப்போது இலை என்றார் அய்யங்கார். அப்போது என்றால் எப்போதுஎன்றார், பெருமான் இறந்த காலம் என்றார். இறந்த காலம் என்றால் என்ன என்று கேட்டார். இப்படி அடுக்கடுக்காய் பெருமான் கேட்டார். அதனால் சற்று திகைத்து நின்றார் அய்யங்கார். பின்னர் பெருமான் சில விளக்கமளித்து கால அளவை விளக்கினார். 1008 செந்தாமரை இதழ்களை அடுக்கி ஒரு ஊசியால் அழுத்திய காலம் ஒரு கால அளவு என்று பெருமான் கூறினார்.
பின்னர் பெருமானை விசிறியால் விசிறி சேவை செய்தனர். பெருமான் தடுத்தார். என்னிடம் ஒளித்தல் கூடாது, என்று சில நாழிகை வரை பெருமானுக்கு விசிறி சேவை செய்தார் அந்த அவதானியார்.
hariharan_82
அவதானியாரின் தற்போத சிந்தனையினை உடைத்துவிட்டார்
வள்ளலார் சுவாமிகள் என்பதையே இந்த கட்டுரை உணர்த்துகின்றது.
ஆனால் கொஞ்சம் சன்மார்க்கம் படித்ததுமே .. அதில் உள்ளவர்கள்..
தம்மையே...
நாம் வந்தோம் போனோம் என்றெல்லாம் தம்மைத் தாமே
தற்போத உணர்வில் மேம்படுத்திக் கொள்கின்றனர்.
பிறத்தியார் அனைவரும் அவர்களை மிக உயர்ந்தவர்கள் என
எண்ண வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் இப்படிச் சொல்வது
அவர்களைத் தாழ வைக்கின்றது.
வள்ளலார் சுவாமிதான் இதெல்லாம் பார்க்கணும்.
Monday, December 7, 2009 at 23:30 pm by hariharan_82